பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 26, 2023

பிற இதழிலிருந்து...

பிரதமர் நரேந்திர மோடியின் தசாவதாரம்! 

க.திருநாவுக்கரசு

திராவிட இயக்க எழுத்தாளர்

திராவிட இயக்­கத் தலை­வர்­க­ளுள் ஒரு­வ­ரான குத்­தூசி சா.குரு­சாமி ‘தசா­வ­தா­ரம்’ எனும் பரப்­புரை நாட­கத்தை எழுதி அதை நடி­க­வேள் எம்.ஆர்.ராதா நடித்து வந்­தார். நமக்­குத் தெரிந்த இரண்­டா­வது தசா­வ­தா­ரம் இது­தான். முதல் தசா­வ­தா­ரம் திரு­மால் எடுத்த பத்து அவ­தா­ரங்­கள்; கதை­கள். இப்­போது மூன்­றா­வது தசா­வ­தா­ரம் ஒன்று முளைத்து இருக்­கி­றது. அண்­மை­யில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி டில்லி செங்­கோட்­டை­யில் தேசி­யக் கொடியை ஏற்­றும் போது இந்த ஆண்­டும் ‘கலர்’ தலைப்­பா­கை­யோடு நீண்ட ‘குஞ்­சங்­கட்டி’ நமது பிர­த­மர் நரேந்­திர மோடி காட்­சி­ய­ளித்­தார் என்­ப­து­தான் அந்த மூன்­றா­வது தசா­வ­தா­ரம்.

2014 ஆம் ஆண்டு முதல் சுதந்­திர தினத்­தன்று ஒவ்­வொரு வகை­யான ‘மல்டி கலர்’ தலைப் பாகை­யோடு நமது பிர­த­மர் செங்­கோட்­டை­யில் ஜொலிக்­கி­றார். கடந்த பத்து ஆண்­டு­க­ளாக நமது பிர­த­மர் இந்த ‘கலர்’ தலைப்­பா­கை­க­ளில் செங்­கோட்­டை­யில் தொடர்ந்து தோன்றி வந்­ததை வலை­த­ளம் ‘தசா­வ­தா­ரம்’ என்று தலைப்­பிட்டு இருக்­கி­றது. நம் போன்­ற­வர்­க­ளுக்கு நடி­க­வே­ளின் தசா­வ­தா­ரம்தான் முத­லில் நினை­வுக்கு வரு­கி­றது. பிர­த­மர் ஏன் புதிய ‘தசா­வ­தா­ரம்’ ஒப்­ப­னைக்­குள் நுழைந்து இருக்­கி­றார்?

வலை­த­ளங்­க­ளைப் பார்க்­கும் பழக்­கம் நமக்கு இல்லை. பிர­த­ம­ரின் தசா­வ­தா­ரத்­தைக் காட்­டிய நண்­பர் நம்­மி­டம், ‘இந்த மாதிரி தலைப்­பா­கை­களை அணிந்­த­வர்­க­ளைப் பார்த்­தாலே எனக்கு மேஜிக் நிபு­ணர் பி.சி. சர்க்­கார் (ஜூனி­யர்) தான் நினை­வுக்கு வரு­கி­றார்’ என்­றார். அவ­ரு­டன் வந்­த­வரோ ‘சாய்வாலாவை தலைப்­பா­கை­யோடு பார்த்­தால் தெரு­வில் குழந்­தை­க­ளுக்கு ஜவ்வு­மிட்­டாய் விற்­கும் விற்­ப­னை­யா­ளர்­தான் எனக்கு நினை­வுக்கு வரு­கி­றார்’ என்­றார். ‘தலப்­பா­கட்டி பிரி­யாணி நினை­வுக்கு வரா­மல் இருந்­தால் சரி’ என்­றோம் நாம்.

பொது­வா­கத் தலைப்­பாகை அணிந்­த­வர்­க­ளைப் பார்த்­தால் நமக்கு சர் சி.வி.இரா­மன், வ.உ.சி., சர் ஏ. இரா­ம­சாமி முத­லி­யார், டாக்­டர் ஏ.எல். முத­லி­யார், டாக்­டர் உ.வே.சா., டாக்­டர் எஸ்.இராதாகிருஷ்­ணன் போன்ற பெரு­மக்­கள் நினை­வுக்கு வரு­கி­றார்­கள். இவர்­கள் எல்­லாம் மக்­க­ளுக்கு அறி­மு­க­மான நாளி­லி­ருந்து தலைப்­பா­கையை அணிந்து வந்­த­வர்­கள் ஆவார்­கள். அவர்­கள் அணிந்­த­தற்கு ஏதும் மக்­கள் பெயர் சூட்­ட­வில்லை. ஆனால் நமது பிர­த­மர் நரேந்­திர மோடியோ கடந்த 10ஆண்­டு­க­ளாக அவர் பிர­த­மர் ஆன­தி­லி­ருந்து சுதந்­திர தின­வி­ழா­வில் கலந்து கொள்­ளும் போது மட்­டும் ‘மல்டி கலர்’ தலைப்­பா­கையை அணிந்து கொள்­கி­றார். அப்­படி அணிந்து 10 ஆவது சுதந்­திர நாளும் வந்து சென்று விட்­டது. இத­னைத் தொடர்ந்து கவ­னித்து வந்த மக்­கள் ‘தசா­வ­தா­ரம்’ என்று பெயர் சூட்டி விட்­ட­னர். இதற்கு முந்­தைய பிர­த­மர்­கள் யாரும் இப்­படி சிறப்பு வேடம் சுதந்­திர தின­வி­ழா­வில் தாங்­கி­ய­தில்லை. ஆனால் மோடி சுதந்­திர தின­விழா சிறப்­பு­ரை­யாற்­றும் நாளில் ‘இராஜ கம்­பீ­ரம்’ என்­கிற மனோ­பா­வத்­தோடு இந்த ஜன­நா­யக யுகத்­தில் தலைப்­பா­கையை ஏன் அணி­கி­றார்? இதற்கு ஏதா­வது சிறப்­பான கார­ணம் இருக்க வேண்­டும் என்றே நாம் கரு­த­வேண்டி இருக்­கி­றது.

அகண்ட பாரத வர்­ஷத்தை அமைக்க இருக்­கி­ற­தா­கக் கரு­தும் மோடி­யும் அவர் கட்­சி­யி­ன­ரும் வர்­ணா­சி­ரம சநா­தன தரு­மத்­தைப் புதுப்­பிக்­கிற நோக்­கத்­தைக் கொண்­ட­வர்­க­ளாக இயங்கி வரு­கி­றார்­கள். காஷ்­மீர் முதல் கன்­னி­யா­கு­மரி வரை பிர­த­ம­ராக இருக்­கிற மோடிக்கு வர்­ணா­சி­ரம வரி­சை­யின் இரண்­டா­வது இட­மான சத்­தி­ரிய இலட்­ச­ணம் நாடா­ளு­ப­வர்­க­ளுக்கு இருக்க வேண்­டும் என்­கிற அவர் க­ளின் நோக்­கத்­தில் சுதந்­திர தினவிழா­வில் ‘மல்டி கலர்’ தலைப்­பா­கை­யைக் கட்­டிக் கொண்டு அடை­யா­ளப்­ப­டுத்தி இருக்க வேண்­டும் அல்­லது அந்த ஆசையை நிறை­வேற்­றிக் கொண்டு இருக்க வேண்­டும்.

பிர­த­மர் மோடி ஆட்­சி­யி­னர் ஜன­நா­ய­கம், மதச்­சார்­பின்மை, சம­தர்­மம் போன்ற வெகு மக்­க­ளின் கொள்­கை­க­ளுக்கு எதி­ரா­ன­வர்­கள். அவர்­கள் 2019 தேர்­த­லில் 31% வாக்­கு­க­ளைப் பெற்­ற­வர்­கள். மீதம் 60% மேல் அவர்­களை எதிர்த்து வாக்­க­ளித்­த­வர்­கள். பா.ஜ.க.வின் அதிக மக்­க­ளவை உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கை­யால் ஆட்­சி­யில் இருப்­ப­வர்­கள். 2014 முதல் அவர்­கள் பேசி­யதை எல்­லாம் சிந்­தித்­துப் பார்த்­தால் இவர்­கள் ஜன­நா­ய­கத்­தைப் பயன்­ப­டுத்தி சத்­தி­ரிய வேடம் கட்­டு­கி­றார்­கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு- - ராஜ­கு­ரு­வாக (நிரந்­த­ர­மாக) இருக்­கும். இது அவர்­க­ளின் திட்­டம். இது நிறை­வே­றுமா என்­பது வேறு விஷ­யம். ஆனால் மெல்ல அவர்­க­ளின் இலக்கை அடைய எண்ணி அடை­யா­ளங்­காட்­டு ­கி­றார்­கள். அதன் வெளிப்­பா­டு­தான் சுதந்­தி­ர­ தினவிழா­வில் பிர­த­மர் மோடி தரிக்­கும் ‘மல்டி கலர்’ தலைப் பா­கை­கள். இது மதச்­சார்­பின்மை நடை­மு­றை­யில் உள்ள நாட்­டில் இந்து ராஜ்­ஜி­யத்­தைக் கட்­ட­மைப்­ப­தன் அடை­யா­ளமே ஆகும் என்று நாம் கரு­து­கின்­றோம். ஆக மோடி இந்­தி­யா­வின் ராஜா­வா­கத் தன்னை எண்­ணிக் கொள்­கி­றார். மறை­மு­க­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­கி­றார்.

பிர­த­மர் சுதந்­திர தின விழா­வில் பேசு­கி­ற­போது விஸ்­வ­கர்மா திட்­டத்தை அறி­வித்து பேசி­யி­ருக்­கி­றார். இதற்­காக ரூ 13,000 கோடி தொகையை ஒதுக்­கி­யி­ருக்­கி­றார்­கள் என்று செய்தி வரு­கி­றது. விஸ்­வ­கர்மா திட்­டம் என்­பது என்ன? பண்­டைய கிராம சமு­தா­யத்­தில் பதினெண் வகை தொழில்­களை விவ­சா­யத்­திற்கு ஏற்ப பிரிக்­கப்­பட்டு இருந்­தது. இவையே பின்­னர் ஜாதி­க­ளா­கக் கெட்­டிப்­ப­டுத்­தப்­பட்­டன. வர்­ணா­சி­ரம முறை­யின் கீழ் அந்த தரு­மத்தை (முறையை)ப் பேணிக் காத்­த­னர். சநா­த­ன­மாக- - அழி­வு­றா­மல் போற்றி வந்­த­னர். இது­வெல்­லாம் வர்­ணா­சி­ரம ஏற்­பாடு.

அய்­ரோப்­பி­யர் வரு­கைக்­குப் பின்­னர் இந்­திய அர­சி­ய­லில் ஜன­நா­ய­கத்­தின் பங்­க­ளிப்பு மக்­க­ளைப் பெரி­ய­தொரு மாற்­றத்­திற்கு உட்­ப­டுத்­தி­யது. பண்­டைய வாழ்க்கை முறை மாறத் தொடங்­கி­யது. இதை ஒரு கோணத்­தில் பார்த்­தால் சநா­த­னத்தை ‘மாறு­தல்’ வெல்­லத் தொடங்­கி­யது. இப்­போ­தும் இது தொடர்ந்து நிகழ்ந்து வரு­கி­றது. இத­னால் வர்­ணா­சி­ரம முறை, சநா­த­னம் ஆகி­யவை மெல்ல மாறி வரு­கிற சூழ்­நி­லை­யில் பா.ஜ.க.வினர் அத­னைப் புதுப்­பிக்­கத் தொடங்­கி­னர். பிரச்­சா­ரம் செய்­த­னர். நினைக்க முடி­யாத நிலை­யில் ஒன்­றிய அர­சின் ஆட்­சி­ய­தி­கா­ரம் பா.ஜ..க.வுக்­குக் கிடைத்­தது. ஆர்.எஸ்.எஸ். மகிழ்ச்­சி­யைக் காட்­டிக் கொள்­ளா­மல் செயல்­ப­டத் தொடங்­கி­யது. ஆகவே அவர்­கள் இந்து இராஷ்­டி­ரம் என்றும் அகண்ட பார­தம் என்­றும் பேசத் தொடங்­கி­னர். சுமார் ஒரு நூற்­றாண்டு கால­மாக திட்­ட­மிட்டு முன் நகர்­தலைச் செய்­ப­வர்­கள் அவர்­கள். இன்று அவர்­கள் அர­சி­யல் சட்­டப் பிரிவு 370-அய் ரத்து செய்­து­விட்­டார்­கள். பாபர் மசூ­தியை இடித்து அங்கே இரா­மர் கோவி­லைக் கட்டி முடிக்க இருக்­கி­றார்­கள். தொலை­நோக்­காக இந்து ராஷ்­டி­ரம் அமைக்க வர்­ணா­சி­ர­மத்­தைப் புதுப்­பிக்க அவர்­க­ளின் முழக்­கத்­தைச் செயல்­ப­டுத்த எண்­ணு­கி­றார்­கள்.

மோடி­யின் இரண்­டாம் கட்ட ஆட்சி முடி­வுக்கு வரு­கி­றது. மூன்­றா­வ­தாக வரு­வ­தற்கு முயற்­சி­யில் இறங்கி இருக்­கி­றார்­கள். மிச்ச சொச்ச நாள்­க­ளில் அவர்­கள் யார் - - என்­பதை நமக்கு நினைவு படுத்த ‘விஸ்­வ­கர்மா’ திட்­டத்தை அறி­விக்­கி­றார்­கள். பதி­னெண் ஜாதி­க­ளைப் புதுப்­பிக்க -- பண்­டைய கைவி­னை­ஞர்­களை ஊக்­கு­விப்­பது என்­கிற பெய­ரால் அந்­தத் திட்­டத்தை அறி­விக்­கி­றார்­கள். இப்­போ­தைய நிலைஎன்ன? அந்­தந்த ஜாதிக்­கு­ரிய தொழிலை அந்­தந்த ஜாதி­களே இப்­போது செய்­வது என்­பது மிக அரி­தா­கி­விட்­டது. எல்லா ஜாதி­யி­ன­ரும் எல்­லாத் தொழில்­க­ளை­யும் செய்து வரு­கின்­ற­னர். நவீன கல்வி முறை பொரு­ளா­தார வளர்ச்சி பெரும் மாற்­றத்தை நோக்கி இந்­தி­யாவை - அதன் மக்­களை உந்­தித் தள்­ளு­கி­றது.

பண்­டைய ஜாதிப் பெயர்­கள், அதன் வழி கிளைத்த தொழில்­கள் வடக்கே உள்ள ‘சர் நேம்­கள்’ எல்­லாம் பழைய நிலை­யில் இயங்­க­வில்லை. மாறு­தல் அவற்றை இயங்­காத நிலையை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது. சமூ­க­நீ­தி­யின் படி அவர்­கள் எந்­த ஜாதி­யா­னா­லும் கல்­வி­யி­லும் பணி­க­ளி­லும் மக்­கள் முன்­னேற அரசு வழி­காட்ட வேண்­டும். கல்வி அவர்­களை வேத­கால வாழ்­வுக்கு ஆயத்­தப்­ப­டுத்­து­வது இந்­திய மக்­களை உலக முன்­னேற்­றத்­தி­லி­ருந்து விலக்கி வைப்­பது ஆகாதா? விஸ்­வ­கர்மா திட்­டம் பதி­னெண் ஜாதி­களை அந்­தப் பணம் கொடுத்து புதுப்­பிப்­பதுஆகாதா? அவர்­களை வேறு வகை­யான முன்­னேற்­றப் பாதை­யில் கொண்டு செலுத்த இய­லாதா? இய­லும். ஆனால் அவர்­க­ளின் இலட்­சி­யப்­படி வர்ண தர்­மத்­தைப் புதுப்­பிக்க வேண்­டாமா? அதற்­கா­கத்­தான் சத்­தி­ரிய இலட்­ச­ணத்­தோடு முடி­சூடி, ‘மல்டி கலர்’ தலைப்­பா­கை­யோடு ‘குஞ்­சங்­கட்டி’ பிர­த­மர் நரேந்­திர மோடி விஸ்­வ­கர்மா திட்­டத்தை அறி­விக்­கி­றார்.

அநே­க­மாக விலை உயர்ந்த ஆடை­க­ளை­யும் தலைப்பாகைக­ளை­யும் அணி­யும் ஒரே இந்­திய பிர­த­மர் நரேந்­திர மோடி­யா­கத்­தான் இருக்க முடி­யும். இவரா தேநீர் விற்ற சாய்வாலா? இவரா மண் குடி­லில் பிறந்த ஏழை - - இருக்க முடி­யாது. அப்­படி இருந்­தால் சம­தர்­மத்­தைப் போற்­று­வார். மதச்­சார்­பின்­மையை ஆத­ரிப்­பார். ஜன­நா­ய­கத்தை மேலும் செம்­மைப் ப­டுத்த துணை நிற்­பார். இவர் வேத­கால விழுது. வர்­ணா­சி­ரம பித்­தர். கற்­ப­னைக் கிறுக்­கர். ஆக­வே­தான் விஸ்­வ­கர்மா திட்­டத்தை அறி­விக்­கி­றார்.

மோடி­யின் முடி­யப்­போ­கும் இந்த ஒன்­றிய அரசு இன்­னொரு பணி­யை­யும் சந்­தடி சாக்­கில் செய்து கொண்டு இருக்­கி­றது. அது என்ன திட்­டம் தெரி­யுமா? வேதக்­கல்­வி­யைப் பரப்­பும் திட்­டம். ‘மக­ரிஷி ராஷ்­டி­ரிய வேத் வித்யா பிர­திஸ்­தான்’ (சமஸ்­கி­ருத பல்­க­லைக் கழ­கம்) தமிழ்­நாட்­டில் விரை­வில் தொடங்­கப்­ப­டும் என்று ஒன்­றிய கல்வி அமைச்­ச­கம் அறி­வித்து இருக்­கி­றது. இந்த அமைப்பு 1987--இல் அப்­போ­தைய ஒன்­றிய அமைச்­சர் பி.வி. நர­சிம்­ம­ரா­வால் டில்­லி­யில் தொடங்­கப்­பட்­டது. பிறகு இவ்­வ­மைப்பு மத்­திய பிர­தே­சத்­தில் உள்ள உஜ்­ஜை­யி­னிக்கு மாற்­றப்­பட்­டது. இந்த அமைப்­பின் முக்­கி­யப் பணி வேத பாட­சா­லை­களை உரு­வாக்­கு­வ­தும், அதனை ஆத­ரிப்­ப­தும் ஆகும். இப்­ப­டிப்­பட்ட வேத பாட சாலை­கள் இந்­தியா முழு­வ­தும் 450 கல்வி நிறு­வ­னங்­கள் செயல்­பட்டு வரு­கின்­றன.

இந்த அமைப்பு இந்­திய பல்­க­லைக் கழ­கத்­தா­லும் அகில இந்­திய தொழில் நுட்ப கல்­விக் கழ­கத்­தா­லும் ஏற்­ப­ளிப்பு வழங்­கப்­பட்­டது ஆகும். இதற்­கான வாரி­யம் கடந்த ஆண்டே தொடங்­கப்­பட்டு விட்­டது. இவ்­வா­ரி­யத்­தின் கிளை­கள் இரா­மே­சு­வ­ரம், பத்­தி­ரி­நாத், துவா­ரகா, உஜ்­ஜை­யினி நக­ரங்­க­ளில் ஒன்­றிய அர­சின் சார்­பில் அமைக்­கப்­ப­டும் என்­கிற அறி­விப்­பு­கள் வெளி­யாகி இருக்­கின்­றன. ஏற்­க­னவே இரா­மே­சு­வ­ரத்­தில் கொண்டு வந்த சமஸ்­கி­ருதக் கல்­லூரி மூடப்­பட்­டு­விட்­டது.

விஸ்­வ­கர்மா திட்­டம் - வேதக் கல்வி பிரச்­சா­ரத் திட்­டம் ஆகி­ய­வை­யெல்­லாம் அகண்ட ஹிந்து ராஜ்­ஜி­யத்­தைக் கட்­ட­மைக்க செய்­யும் ஏற்­பா­டு­களே ஆகும். அதற்­கா­கத்­தான் நரேந்­திர மோடி தசா­வ­தா­ரத்­தின் மூல­மாக தனது அடை­யா­ளத்­தைக் காட்ட சுதந்­திர தினத்­தில் சத்­தி­ரிய கோலந்­தாங்கி அறி­விப்­பு­களை வெளி­யி­டு­கி­றார் - சுதந்­திர தின­விழா உரையை நிகழ்த்­து­கி­றார்.

ஆகவே நாம் மோடி அணியை மூன்­றாம் முறை­யாக ஆட்சி அமைக்­க­வி­டக் கூடாது. அதற்­காக நாம் மக்­க­ளைத் திரட்ட வேண்­டும். அந்­தப் பழ­மை­வா­தி­க­ளின் திட்­டங்­களை ‘இந்­தியா’ அணி­யின் மூலம் நாட்டு மக்­க­ளுக்­குச் சொல்லி அம்­ப­லப்­ப­டுத்த வேண்­டும். ஒன்­றிய பா.ஜ.க. அரசை மக்­கள் தூக்­கி­யெ­றி­யும்படி செய்ய வேண்­டும். இப்­போது நம்­முன் உள்ள ஒரே அம்சத் திட்­டம் இது­தான்.

நன்றி: 'முரசொலி',25.8.2023


No comments:

Post a Comment