அதிர்ச்சித் தகவல்: இளவயதில் மனநல பாதிப்பிற்குள்ளானோர் இந்தியாவில் அதிகம் : ஒன்றிய சுகாதார அமைச்சர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

அதிர்ச்சித் தகவல்: இளவயதில் மனநல பாதிப்பிற்குள்ளானோர் இந்தியாவில் அதிகம் : ஒன்றிய சுகாதார அமைச்சர்

புதுடில்லி, ஆக. 5  இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 10.6 சதவிகிதம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை விழுப்புரம் நாடாளு மன்ற உறுப்பினர் டி.ரவிகுமாரின் கேள்விக்கானப் பதிலாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அளித்துள்ளார். இது குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அளித்த தகவல் பின்வருமாறு: ''2015-_2016இ-ல் தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் மூலம் அரசு தேசிய மனநலக் கணக் கெடுப்பை நடத்தியது. நாட்டின் 12 மாநிலங்களில் அது நடத்தப் பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட வர்களில் பொதுவான மனநலக் கோளாறுகள், கடுமையான மன நலக் கோளாறுகள், மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறுகள் (புகையிலை உப யோகக் கோளாறு நீங்கலாக) உள்ளிட்ட மனநலக் கோளாறு களின் பாதிப்பு சுமார் 10.6 சதவிகிதம் என்று அந்தக் கணக்கெடுப்பில் கண்டறியப்பட் டுள்ளது'' என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தனது கேள்விகான அமைச் சரின் பதில் குறித்து விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  டி.ரவி குமார் கூறும் போது,  ''மனநல பாதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக இருந் தாலும் இந்தியா முழுவதும் மனநல மருத்து வர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதை அமைச்சர் அளித்த விவரம் காட்டு கிறது. ஒரு லட்சம் பேருக்கு 3 மனநல மருத்துவர் தேவை என்ற நிலையில் 1 மருத்துவர் என்ற அளவில்கூட எந்த மாநிலத்திலும் இல்லை.  இதன் மீது ஒன்றிய அரசு உடனடியாக செயல் பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

 

No comments:

Post a Comment