ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் கிளைக்கழக வாரியாக சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 16, 2023

ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் கிளைக்கழக வாரியாக சந்திப்பு

ஜெயங்கொண்டம், ஆக. 16- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் கிளைக் கழக வாரி யான சந்திப்பு 6 .8. 2023 ஞாயிறு அன்று பகல் 1 மணியளவில் தொடங்கியது. 

மீன்சுருட்டிகிளைக் கழகத்தில் தொழிலதிபர் ராஜா அசோகன் வணிக வளாகத்தில் சந்திப்பு நடை பெற்றது. அதனை தொடர்ந்து ராமதேவநல்லூர் ரஞ்சித் குமார் இல்லத்திலும், ரெட்டிபாளையத் திலும் சந்திப்புகள் நடைபெற்றது. கூட்டத்தில் தெருமுனை பிரச் சாரம் நடத்துவது குறித்தும் ,கழகக் கொடியேற்றுவதுகுறித்தும் கலந்துரையாடப்பட்டது. பின்னர் அணைக்கரையில் பெரியார் பெருந்தொண்டர் டேப் தங்கராசு உணவகத்தில் சந்திப்பு நடை பெற்றது. டேப் தங்கராசு நினைவு நாள் நிகழ்ச்சி நடத்துவது குறித் தும், கழகக் கொடி ஏற்றுவது குறித் தும் கலந்துரையாடப்பட்டது.

திராவிடர் கழக வரலாறு என்ற புத்தகத்தில் அணைக்கரை டேப் தங்கராசு பற்றி குறிப்பிடப்பட்டுள் ளது. அந்த நூலை அவர்களது குடும்பத்தாரிடம் தலைமைக் கழக அமைப்பாளர்க. சிந்தனைச் செல் வன் அளித்தார். பின்னர் உட் கோட்டை கிளை கழகத்தில் சந்திப் பும்,பெரியார் சிலை  ,படிப்பகம் ஆகியவற்றையும் பொறுப்பாளர் கள் பார்வையிட்டனர்.

ஆயுதகளம் கிராமத்திற்கு சென்று தோழர்கள் ஆ.ரங்கராஜன், மு. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை சந்தித்து இயக்கப் பணிகள் துரி தப்படுத்தப்பட்டது.பின்னர் எழில் வணிக வளாகத்தில் பொதுக்குழு உறுப்பினர் சி. காமராஜ், பெரியார் செல்வன் ஆகியோரை சந்தித்தோம். வேலாயுத நகரில் வை.செல்வராஜ் இல்லத்திலும்,பகுத்தறிவு நகரில் தலைமையாசிரியர் அறிவழகன் இல்லத்திலும், உத்தரகுடியில்  அறி வுச்செல்வன், ஆ ஜெயராமன் ஆகியோரை சந்தித்தும் இயக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டியதன் அவசியம் வலியு றுத்தப்பட்டது.

பின்னர் கீழக் குடியிருப்புசேகர் இல்லத்திலும், சவுந்தரபாண்டியன் நகர் துரை. பிரபாகரன்-வளர்மதி இல்லத்திலும், சூரிய மணல் வழக் குரைஞர் ராஜா இல்லத்திலும் கிளை கழக சந்திப்பு கூட்டம் நடை பெற்றது. அனைத்து கூட்டங்களி லும் பொதுக்குழு தீர்மானங்களை யும் தலைமையில் செயற்குழு தீர் மானங்களையும் செயல்படுத்த வலி யுறுத்தப்பட்டது. கூட்டங்க ளில் தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன், மாவட்ட செயலாளர் மு. கோபா லகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர்இரா. திலீபன் மாவட்டத் துணைச் செயலாளர் மா. சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment