அஞ்சல் ஊழியர் பணிக்கு ஆட்கள் தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 16, 2023

அஞ்சல் ஊழியர் பணிக்கு ஆட்கள் தேர்வு

அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் 2,994 கிராமிய அஞ்சல் ஊழியர் காலி பணியிடங்களை நிரப்பு வதற்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதில், சென்னை நகர மண்டலத்தின் கீழ், 607 பணியிடங் களை நிரப்புவதற்குத் தகுதியான விண் ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதன்படி, கிளை அஞ்சல் அதிகாரி, துணை கிளை அஞ்சல் அதிகாரி, கிராமிய அஞ்சல் ஊழியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கிளை அஞ்சல் அதிகாரி பணிக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.29,380 வரையிலும், துணை கிளை அஞ்சல் அதிகாரி, கிராமிய அஞ்சல் ஊழியர் பணிக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.24,470 வரையும் ஊதியம் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை https://indiapostgdsonline.gov.in என்ற இணைய தளத்தின் மூலமாகச் சமர்ப்பிக்கலாம். விண்ணப் பிக்க வரும் 23ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

கல்வித் தகுதி, மாற்றுத் திறனாளி களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் இதர தகுதி, நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களை https://indiapostgdsonline.gov.in என்ற இணையதளம் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம் என சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஜி.நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment