சேலம் பொன்னம்மாப்பேட்டையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 14, 2023

சேலம் பொன்னம்மாப்பேட்டையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

சேலம், ஆக.14- சேலம் மன்னார்பாளையம் பிரிவு சாலையில் 31.7.2023 அன்று மாலை பொன்னமாப்பேட்டை பகுதி கழகத்தின் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலா ளர் சேலம் பா. வைரம் தலைமையில் நடைபெற்றது. 

திராவிடர் கழகம் உதயமான சேலம் மண்ணில் தந்தைபெரியார் கொள்கை களை அரசு சட்டங்களாக மாற்றிசெயல் வடிவம் கொடுத்த அய்யாவின்  வழிவந்த முத்தமிழறிஞர் கலைஞருக்கு தாய் கழகத்தின் சார்பில் நூற்றாண்டு விழா நடத்துவது மிகுந்த மகிழ்ச்சி என்று அவர் தமது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

ஓசூர் கழக மாவட்ட தொழிலாளரணி செயலாளர் சேலம் பா. வெற்றிச்செல்வன்  அனைவரையும் வரவேற்று உரையாற் றினார்.

தலைமை கழக அமைப்பாளர் எடப் பாடி கா.நா. பாலு, மாவட்ட தலைவர் அ.ச. இளவழகன்,  காப்பாளர் கி. ஜவகர், மாநகர தலைவர் அரங்க. இளவரசன், செயலாளர் சி.பூபதி, மகளிரணி அமைப்பாளர் த.சுஜாதா ஆகியோர் முன்னிலை ஏற்ற னர்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற 

9 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வெ. தெய்வலிங்கம், 10 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் இரா. சாந்தி, 33 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பு.சீ. ஜெயசிறீ, 35 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் எம். பச்சியம்மாள், 9 ஆவது கோட்ட திமுக செயலாளர் மு. லோகு (எ) லோகமுத்து, 10 ஆவது கோட்ட திமுக செயலாளர் இரா. மணிவண்ணன், 33 ஆவது கோட்ட திமுக செயலாளர் பி.வி. சாந்தாராம், 35 ஆவது கோட்ட திமுக செயலாளர் வி. சம்பத், 36 ஆவது கோட்ட திமுக செய லாளர் கே.கே. சவுந்திரராஜன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

நிகழ்ச்சி சிறப்பான வகையில் நடந்திட முழு ஆலோசனைகளையும், ஒத்துழைப் பையும் நல்கிய ஆற்றல்மிகு செயல்வீரர் பொன்னமாப்பேட்டை பகுதி திமுக செய லாளர் கேபிள் கே. இராஜா முத்தமிழறிஞர் கலைஞரின் ஒளிப்படத்தை திறந்து வைத்து  தாய்கழகத்தின் சார்பில் நடை பெறக்கூடிய கலைஞரின் நூற்றாண்டு விழா என்பது எங்களுக்கெல்லாம் பெருமையாக, சாலப் பொருத்தமாகவும் உள்ளது என்றார். தந்தை பெரியார் ஆற்றிய தொண்டினை எடுத்துக்கூறி சமுதாய முன்னேற்றத்தின் சிற்பி என்றும் கலைஞரின் ஆட்சி சாதனைகளை எடுத்துக்கூறி அதன் தொடர்ச்சிதான் மு.க.ஸ்டாலின் ஆட்சி என்ற கருத்தினை தனது உரையில் குறிப்பிட்டார்.

சிறப்புரையாற்றிய கழகத்தின் துணை பொதுச்செயலாளர் வழக்குரைஞர் 

சே.மெ. மதிவதனி  தனது உரையில், 1924 இல் கேரளா மாநிலம் வைக்கம் தெருவில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட மக்கள் நடப்பதற்கு  உரிமை மறுக்கப்பட்ட காலத்தில் காங்கிரசார் அதனை கண்டித்து போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட பிறகு அந்தப் போராட்டத்தினை தொடர்ந்து நடத்திட காங்கிரஸ் கட்சியில் எவ்வளவோ கடவுள் நம்பிக்கையுள்ள தலைவர்கள் இருந்த பொழுதும் ஏன் அந்தக் காலத்தில் சங்கராச்சாரிகளை நம்பிய காங்கிரசும் அவர்களையெல்லாம் போராட்டம் நடத்திட அழைக்காமல் தமிழ்நாட்டி லிருந்து கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் அவர்களைத்தான் அழைத் தார்கள். அந்த போராட்டத்தினை தொடர்ந்து நடத்திட சொன்னார்கள்.

மொழி தெரியாத மண், வேறு கலாச்சாரத்தை பின்பற்றக்கூடிய மக்கள் வாழக்கூடிய மண் என்றும் கூட பார்க் காமல் அழைத்தவுடன் நேரடியாக சென்று வைக்கத்து மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தி இரண்டு முறை கைதுசெய்யப்பட்டு கடுமையான சிறைத் தண்டனை வழங்கப்பட்ட பொழுதும்  தண்டைனைக்கு பிறகு வெளியே வந்து அந்த மக்களுக்கு வைக்கம் தெருவில் நடக்க அனுமதி வழங்கும் வரை போராடி வெற்றி கண் டவர்'' என்று பொதுமக்கள் எளிதாக புரியும் வண்ணம் எடுத்துக்கூறி உரையாற் றினார்.

அதேபோல தந்தை பெரியாரின் மாணாக்ககராக வளர்ந்த கலைஞர் அவர்கள் அரசியல் களத்தில் நின்று கொள்கைத் தலைவராம் தந்தை பெரி யாரின் அனைத்து தீர்மானங்களையும் சட்டமாக இயற்றி செயல்வடிவம் கொடுத்து அந்த தலைவர் வாழ்ந்த காலத்திலேயே மக்களுக்குப் பயன் பட்டதை தந்தை பெரியார் அவர்களை காண வைத்து மகிழ்வித்தவர் என்று குறிப்பிட்டார்.

இந்தியாவிலேயே எந்த ஒரு இயக் கமும்  கண்டிராத காவல்துறையின் அடக்குமுறைக்கு ஆளான இயக்கம்  திராவிட முன்னேற்ற கழகமும் அதன் தலைவர்களும் தான். ஆனால் அந்த தலைவரால் தான் காவல் துறையில் தனி ஆணையம் அமைக்கப்பட்டு பெண் களுக்கு காவல் துறையில் பணி நிய மனமும் வழங்கப்பட்டது என்று குறிப் பிட்டார்.

ஊராட்சி மன்ற பதவிகளில் பெண் களுக்கு அய்ம்பது சதவீதம் வழங்கியது திராவிடல் மாடல் அரசுதான் என்றார். அய்.ஏ.எஸ் அதிகாரிகள் தந்தை பெரியாருக்கு பாராட்டு விழா நடத்திய நிகழ்வில்   பெரியார் அவர்கள்  சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ள நீதிபதிகளில் ஒருவர் கூட தாழ்த்தப்பட்டவர்கள் இல்லையே என்று வருத்தப்பட்டு பேசிய செய்தி அறிந்த கலைஞர் அவர்கள் கடலூர் மாவட்ட நீதிபதியாக இருந்த வரதராஜன் அவர்களை உடனடியாக உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்து தந்தை பெரியார் அவர்களின் கனவை நனவாக்கினார். மேலும் புதிய கல்வி கொள்கையால் வரும் ஆபத்துகள் குறித் தும் ஒன்றிய பிஜேபி அரசால் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதையும் கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கப்படப் போகிறது என்பதையெல்லாம் மிக தெளிவாக புரியும் வண்ணம் எடுத்து விளக்கி எதிர்வரும் நாடாளு மன்ற தேர்தலில் திமுக அரசுக்கும் அதனை வழிநடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் நாமெல்லாம் பக்க பலமாக இருந்து ஒன்றிய பிஜேபி அரசை அகற்ற பாடுபடவேண்டும் என்று உரையாற்றினார். பொன்னமாப்பேட்டை பகுதி கழக செயலாளர் மோ.தங்கராஜ் நன்றியுரையாற்றினார்.

No comments:

Post a Comment