இதுதான் பிஜேபியின் கோர ஆட்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 26, 2023

இதுதான் பிஜேபியின் கோர ஆட்சி!

விருப்ப ஓய்வுக்குப் பின்னும் பல ஆண்டுகள் ஊதியம் பெற்ற அரசுப் பொறியாளர்கள்

புதுடில்லி, ஜூலை 26  உத்தரப் பிரதேசத்தில் அரசுப் பொறியா ளர்கள் விருப்ப ஓய்வுக்கு பிறகும் ஊதியம் பெற்றிருப்பது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ஏற்பட்ட ரூ.100 கோடி இழப்பை அவர்களிடம் இருந்து வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

உ.பி.யின் வீட்டு வசதி வளர்ச்சித் துறையில் கடந்த 2009-இல் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) திட்டம் அறி விக்கப்பட்டது. 58 வயதானவர் களுக்கான இத்திட்டத்தில் ஓய்வு வயது 60 வரையிலான அனைத்து சலுகைத் தொகையும் அளிக்கப் பட்டது. இதை, ஏற்று அத்துறையின் 299 பொறியாளர்கள் 2 வருட சலுகைகளுடன் விஆர்எஸ் பெற் றனர். ஆனால் அவர்களது பெயர்கள் அவர்கள் பணியாற்றிய அலுவலகப் பதிவேடுகளில் இருந்து அகற்றப்படவில்லை. இதனால் அவர்களுக்கும் மாத ஊதியமும் பிற சலுகைத் தொகைகளும் கிடைத்துவந்துள்ளது. 

இச்சூழலில், அத்துறையின் ஓர் அலுவல கத்தில் புதிதாக அமர்த்தப்பட்ட ஒரு கணக் காளர், அலுவ லர்களின் பதிவேடுகளை சரி பார்த்துள்ளார். அதில் விஆர்எஸ் பெற்ற வர்களும் ஊதியமும் சலுகைகளும் பெற்றிருப்பதை கண்டுபிடித்துள்ளார். 

சிலர் உயிருடன் இல்லை: இது, மாநில கூடுதல் தலைமைச் செய லாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அத்துறையின் பிற அலுவலகங்களிலும் பதிவேடுகள் சரிபார்க்கப் பட்டன. இதில் மேலும் பலர் ஊதியமும் சலுகைகளும் பெற்றிருப்பதும் இதனால் அரசுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட் டுள்ளதும் தெரியவந்தது. 

இதையடுத்து இத்தொகையை திரும்ப வசூலிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த தொகையை வசூலிப்பதே கேள்விக் குறியாகிவிட்ட நிலையில், அவர்களில் சிலர் தற்போது உயிருடன் இல்லை என்பதும் சிக்கலாகிவிட்டது. 

குழு அமைப்பு: இந்த முறை கேட்டை விசாரிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட் டுள்ளது. இதன் முதற்கட்ட விசாரணையில், தற் போது பணியில் உள்ள சிலரின் உதவியால் இந்த முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரின் மீதும் நட வடிக்கை எடுக்க கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தர விட்டுள்ளார். இத்துடன், உ.பி.யின் வேறு சில துறைகளிலும் இந்த சட்டவிரோத செயல் நடைபெற்றிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதனால் அனைத்துத் துறைகளின் அலுவலர் பதிவேடுகளை ஆய்வுசெய்ய உத்தர விடப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment