முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்த, பாரசீக மதங்களை சேர்ந்த சிறுபான்மையினரின் குடும்பத்துக்கு 100 விழுக்காடு மானியத்துடன் ரூ.1 லட்சம் நிதியுதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 26, 2023

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்த, பாரசீக மதங்களை சேர்ந்த சிறுபான்மையினரின் குடும்பத்துக்கு 100 விழுக்காடு மானியத்துடன் ரூ.1 லட்சம் நிதியுதவி

தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் அறிவிப்பு

அய்தராபாத், ஜூலை 26- தெலங் கானாவில் வசிக்கும் தகுதியான சிறுபான்மையினர் குடும்பத்தில் ஒருவருக்கு 100 சதவீதம் மானியத்தில் ரூ.1 லட்சம் நிதி உதவி செய்வதாக தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத் தலை நகர் அய்தராபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் பேசியதாவது: 

சிறுபான்மையினர் சமூக, கல்வி, பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைய வேண்டுமென்பதே இந்த அரசின் நோக்கம்.

ஆதலால், சிறுபான்மையின ரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்த, பாரசீக மதங்களை சேர்ந்த அனைத்து பிரிவினருக்கும் சிறு பான்மையினர் நல வாரியம் மூலம் குடும்பத்தில் தகுதியான ஒருவருக்கு 100 சதவீத மானியத்துடன் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

எங்களின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில், சிறுபான்மையினரின் வளர்ச்சிக்காக ரூ.8,581 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஷாதி முபாரக் திட்டத்தின் கீழ் ஒரு திருமணத்துக்கு ரூ.2,32,713 வீதம் ஏழை முஸ்லிம் பெண்கள் திரு மணத்திற்கு ரூ.1,903 கோடி செலவு செய்யப்பட்டது.

சிறுபான்மையினருக்காக 204 பள்ளி, 204 கல்லூரிகள் கட்டப் பட்டுள்ளன. இந்த பள்ளிகளுக்கு 5,862 ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளோம். முதலமைச்சர் அயல் நாட்டு கல்வி திட்டத்தின் கீழ் 2,701 மாணவ, மாணவியருக்கு ரூ. 435 கோடி செலவிட்டு, வெளிநாடுகளில் மேற்படிப்பு படிக்க அனுப்பி வைத்தோம். மேலும், 20 ஆயிரம் தையல் இயந்திரங்கள், 941  வாட கைக் கார்களை வழங்கியுள்ளோம்.

கிறிஸ்தவக் கோவில்கள் கட் டுவதற்கான விதிமுறைகளை சுலப மாக்கினோம். சீக்கியர்களுக்காக அய்தராபாத்தில் குருத்வாரா கட்டுவதற்கு 3 ஏக்கர் அரசு நிலத்தை வழங்கினோம். ஜைனர்களுக்கும் சிறுபான்மையினர் வாரியங்களில் இடமளித்தோம். 

-இவ்வாறு முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் பேசினார்.

No comments:

Post a Comment