வைக்கம் நூற்றாண்டு விழா-கலைஞர் நூற்றாண்டு விழா கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

வைக்கம் நூற்றாண்டு விழா-கலைஞர் நூற்றாண்டு விழா கூட்டம்

பொதட்டூர்பேட்டை, ஜூலை 7-  திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் 25.6.2023 மாலை 5 மணி அளவில் வைக்கம் நூற்றாண்டு விழா கலைஞர் நூற்றாண்டு விழா பொது கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்திற்கு பெரியார் பெருந் தொண்டர் இரா.கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி மோகன் வேலு முன்னிலை வகுத்தனர். முன்ன தாக தலைமை கழக அமைப்பாளர் பொன்னேரி பன்னீர்செல்வம் தொடக்க உரையாற்றினார். 

தஞ்சை இரா பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். பொதட்டூர் புவியரசன், காப்பாளர் மா.மணி மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண் டனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் கூட்டத்தில் கேட்டு தெளிந்தனர். இறுதியாக திராவிட மணி நன்றியு ரையாற்றினார்.

No comments:

Post a Comment