கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 15, 2023

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஜூலை 15 - கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 121ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2023) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலை, பெரியார் பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, தலைமைக் கழக அமைப்பாளர்கள் தே.செ.கோபால், வி.பன்னீர் செல்வம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, தென்சென்னை மாவட்ட தலை வர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர்.சேது ராமன், துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், மு.சேகர், மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் துரை.அருண், ச.மகேந்திரன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், பார்த்திபன், சோழிங்கநல்லூர் மவட்ட தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், செய லாளர் செம்பாக்கம் விஜய் உத்தமராஜ், மடிப்பாக்கம் பி.சி.ஜெயராமன், திருவொற்றியூர் மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், நெய்வேலி வெ.ஞான சேகரன், வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராம லிங்கம், இளை ஞரணித் தலைவர் நா.பார்த்திபன், ஆவடி மாவட்ட அமைப்பளர் உடுமலை வடிவேல், க.கலைமணி, ம.சக்திவேல், ஜெ.ஆனந்த், கமலேஷ் கொடுங்கையூர் கோ.தங்கமணி, பா.பாலு, க.செல்லப் பன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மகளிர் பாசறை த.மரகதமணி, தங்க.தனலட்சுமி, முத்துலட்சுமி உள்ளிட்ட தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment