பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் லாலு பிரசாத் பங்கேற்பார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் லாலு பிரசாத் பங்கேற்பார்

பாட்னா, ஜூலை 7- பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தான் கலந்துகொள்ள இருப்பதாக பீகார் மாநில மேனாள் முதலமைச்சரும், ராஷ் டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் தெ ரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி நடந்து வருகிறது.

இதற்காக கடந்த மாதம் 23-ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. 

2ஆ-வது கூட்டம் கரு நாடகா தலைநகர் பெங்களூருவில் வருகிற 17, 18 தேதிகளில் நடை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தான் கலந்துகொள்ள இருப்பதாக பீகார் மாநில மேனாள் முதல மைச்சரும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.

பாட்னா விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டிய ளித்த லாலு பிரசாத், "எனது வழக்கமான மருத்துவ பரி சோதனை, ரத்தப் பரிசோதனை உள்ளிட்டவற்றுக்காக டில்லி செல்கிறேன். 

அதை முடித்து பாட்னா திரும்பிய பிறகு எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற் காக பெங்களூருக்கு செல்வேன். 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றியத்தில் இருந்து மோடி அரசை அகற்றுவதற்கான களத் தைத் தயார்படுத்துவேன்" என கூறினார்.

No comments:

Post a Comment