வள்ளியூரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா. முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 17, 2023

வள்ளியூரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா. முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

வள்ளியூர், ஜூலை 17- வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா. முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் விழா  15.7.2023அன்று மாலை 6.30மணிக்கு வள்ளியூர் திருவள்ளுவர் கலையரங்கில் எழுச்சியோடு நடைபெற்றது.  

மாவட்ட  கழக செயலாளர் இரா. வேல்முருகன் தலைமை வகித்தார். நகர திமுக செயலாளர் இராதாகிருட்டினன் பகுத்தறிவாளர் கழக துணைச் செய லாளர் இ.மோகன்சுந்தர், நகர திமுக செயாளர் முன்னிலை வகித்தார்கள. நகர பகுத்தறிவாளர் கழகத்தலைவர் த.குணசீலன், நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஏ.எம்.சத்யன், நகர பகுத் தறிவாளர்கழக துணைத்தலைவர் வெள்ளைப்பாண்டி, திமுக மாவட்ட பிரதிநிதி நைனார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி ஆகி யோர் உரையாற்றினார்கள். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தொடக்கவுரையாற்றினார். கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் ஒன்றரைமணி நேரம் சிறப்பாக உரையாற்றினார். இறுதியில் நகர திராவிடர் கழக செயலாளர் பெ.நம்பிராசன் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment