கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 17, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

17.7.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

👉அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக, திரிணா முல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, அய்க்கிய ஜனதா தளம் உள்பட 26 எதிர்க்கட்சிகளின் 2ஆவது கட்ட ஆலோசனை கூட்டம் இன்றும், நாளையும் பெங்களூரு வில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மம்தா, நிதிஷ்குமார், கெஜ்ரிவால் உள் ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

👉 டில்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் அவசர சட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என அறிவித்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆம் ஆத்மி முடிவு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉கருநாடகாவின் பெங்களூருவில் நடைபெறும் இரண்டாவது எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, பாரதிய ஜனதாவை (பாஜக) ஆட்சியில் இருந்து அகற்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார்.

தி டெலிகிராப்:

👉மணிப்பூரில் உள்ள பத்திரிகையாளர் ஒருவர், தற்போது மணிப்பூரில் நடந்து வரும் கொந்தளிப்பு பற்றி பேசுகையில், முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தை விட பாஜக - ஊடகங்களை மிகவும் கட்டுப்படுத்துகிறது என்றும், அக்கட்சியால் விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடிய வில்லை என்றும் கூறினார்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment