"சனாதன எதிர்ப்பே வள்ளலாரின் சன்மார்க்கம்" வடலூரில் வள்ளலார் விழா-மக்கள் பெருந்திரள் மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 10, 2023

"சனாதன எதிர்ப்பே வள்ளலாரின் சன்மார்க்கம்" வடலூரில் வள்ளலார் விழா-மக்கள் பெருந்திரள் மாநாடு

வடலூர், ஜூலை 10 - வடலூரில் வள்ளலார் விழா மக்கள் பெருந்திரள் மாநாடு பல் லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க சிறப்புடன் நடந்தது!

வடலூர் வள்ளலார் மக்கள் இயக்கம் சார்பில் "சனாதன எதிர்ப்பே வள்ளலாரின் சன்மார்க்கம்" என்ற முழக்கத்தோடு வள்ளலார் விழா - மக்கள் பெருந்திரள் மாநாடு வடலூர் பேருந்து நிலையத் திடலில் 7.7. 2023 அன்று மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 10.30 மணி வரை திமுக ஒன்றிய செயலாளர், மாவட்ட கல்விக்குழு தலைவர் பொறி யாளர் சிவக்குமார் தலைமையில் நடை பெற்றது. 

நகராட்சி தலைவர் சிவக்குமார், நகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன், திராவிடர் கழக நிர்வாகிகள் அரங்க பன்னீர்செல்வம், சோ.தண்டபாணி, நா.தாமோதரன் கா.எழிலந்தி, தென் சிவக்குமார், மணிவேல், பஞ்சமூர்த்தி, உதயசங்கர், கோ.வேலு டிஜிட்டல் ராமநாதன், மகளிர் அணி முனியம்மாள், குணசுந்தரி, சத்தியா ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது. வடலூர் நகர வள்ளலார் மக்கள் இயக்க தலைவர் புலவர் இராவணன் வரவேற்புரை ஆற்றினார்.

தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

தொடக்க நிகழ்ச்சியாக மழையூர் சதாசிவம் குழுவினரின் இசை நிகழ்ச்சி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடை பெற்றது. வடலூர் குறுக்கு சாலையில் உள்ள பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப் பட்டது. 6.45 மணிக்கு உரையரங்கம் தொடங்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் குப்புசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மக்கள் அதிகாரம் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ராசு, விடு தலை சிறுத்தைகள் அமைப்பின் சார் பில் வழக்குரைஞர் திருமார்பன், முல்லை வேந்தன், தாமரைச்செல்வன், சன் மார்க்க சங்க நிர்வாகி கடலூர் ராஜ துரை ஆகியோர் அவரவர் அமைப்பின் சார்பில் வள்ளலாரின் சன்மார்க்க நெறியை விளக்கியும், வள்ளலாரை சனாதனத்தின் உச்சம் என்று உரைத்த ஆளுநர் ரவி அவர்களை கண்டித்தும், அவருடைய அறியாமையை அம்பலப் படுத்தியும் கருத்துரை ஆற்றினர்.

முனைப்பாக இந்த மாநாட்டை முன்னெடுத்த திராவிடர் கழகம் மற்றும் வள்ளலார் மக்கள் இயக்க நிர்வாகிகளை பாராட்டியும் பேசினர். 

மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரி யருக்குக் கழக இளைஞர் அணியினர் தீப்பந்தம் ஏந்தி வரவேற்பு அளித்தனர். 

விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் நிறுவனர் தொல். திருமாவளவனை அதிர்வேட்டுக்கள் மூலம் வரவேற்றனர். மக்கள் கடலில் நீந்தியபடியே இரண்டு தலைவர்களும் மேடைக்கு வந்து சேர்ந்தனர். வாழ்த்தும் முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, பொதுச் செயலாளர் முனைவர் துரை,சந்திரசேகரன் ஆகி யோர் பேசியபின் விடுதலை சிறுத்தை கள் அமைப்பின் தலைவர் தொல் திரு மாவளவன் சனாதனத்தை வெளுத்து வாங்கினார். அறம் மீறும் ஆளுநரை கண்டித்தார். கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மாநாட்டின் நோக்கத்தை விளக்கியும், வள்ளலாரின் சன்மார்க்க கருத்துக்களை வரவேற்றும் வள்ளலாரை சனாதனவாதி என்று உரைத்த ஆளுநரை கண்டித்தும் மிகச் சீரிய உரையை வழங்கினார்

தமிழர் தலைவருக்கு ஆள் உயர ரோஜா மாலை வடலூர் நகர அமைப் பாளர் முருகன் அவர்களால் அணிவிக் கப்பட்டது. அதுபோல எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு ஆள் உயர மாலை விடுதலை சிறுத்தை அமைப்பினர் அணிவித்தனர். வடிவேல் வடலூர் நகர செயலாளர் இரா.குண சேகரன் நன்றி உரை ஆற்றினார் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment