தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் உறுப்பினர்களுக்கு மானியத்துடன் வீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 12, 2023

தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் உறுப்பினர்களுக்கு மானியத்துடன் வீடு

ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் தகவல்

சென்னை, ஜூலை 12- தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களில் வீடற்ற 500 உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியத்தில் ரூ.55 கோடியில் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய வீடுகள் வழங்க மானியம் வழங்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரிய செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், "தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள வீடற்ற 500 உறுப்பினர் களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் வீடுகள் தூய்மைப் பணியாளர் நலவாரிய மானியத்துடன் ரூ.55 கோடி மதிப்பில் வழங்கப்படும்’’ என அறிவித்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள வீடற்ற 500 உறுப்பினர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ரூ.55 கோடி மதிப்பில் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்படும் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய வீடுகள் வாங்க மானியம் வழங்கி அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment