மாரவாடி ஊமை.அர்ச்சுனன் மறைவையொட்டி நடைபெற்ற வீரவணக்கக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 20, 2023

மாரவாடி ஊமை.அர்ச்சுனன் மறைவையொட்டி நடைபெற்ற வீரவணக்கக் கூட்டம்

தருமபுரி, ஜூன் 20- தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராம னின் தம்பி  ஊமை.அர்ச்சுனன் மறைவுக்கு வீரவணக்கக் கூட்டம்.அர்சுனனின்  திராவிடர் இயக்க ஈடுபாட்டை நினைவுறுத்தி  மாவட்ட கழக செயலாளர் பீம. தமிழ்பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

மேனாள் அமைச்சர்  வ.முல்லை வேந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சி  கருநாடக மாநில அமைப் பாளர்  கி.கோவேந்தன், திராவிட முன்னேற்றக் கழக மாநில ஆதி திராவிடர் நலக்குழு துணைச் செய லாளரும் அரூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவருமான சா. ராஜேந்திரன், தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயரா மன், கழக மகளிர் அணி செயலாளர் தகடூர்தமிழ்ச்செல்வி,  பகுத்தறிவா ளர் கழக மாநில துணைத்தலைவர் அண்ணா.சரவணன், தகடூர் தமிழ்ச்செல்வியின் சகோதரர்கள் பாண்டியராஜன், சக்திவேல் ஆகி யோர் இரங்கல் உரையாற்றினர். 

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் அறிவரசன், கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை, தருமபுரி மாவட்ட பகுத்தறிவா ளர்கள் கழக தலைவர் செந்தில் குமார், ஆசிரியரணி இர.கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் பெ.கோவிந்தராஜ், அரூர் மாவட்ட கழக இளைஞரணி தலைவர் யாழ்திலீபன், மாணவர் கழகத் தலைவர் இ.சமரசம், மத்தூர் ஒன்றிய தலைவர் முருகேசன், மாவட்டத் துணைச் செயலாளர் கு.சரவணன், காமலாபுரம் ராஜா, மற்றும் திமுக, விடுதலை சிறுத் தைகள் கட்சியினர்,  அதிமுக, பொதுவுடமை அமைப்பைச் சேர்ந்த தோழர்கள், குடும்பத்தினர், ஊர் பொதுமக்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர். 

மறைவுற்ற ஊமை.அர்சுனன் வாழ்விணையர் சகுந்தலா, மகன் கள் பிரபாகரன், உதயகுமார், மகள் கயல்விழி ஆகியோருக்கு கழகத் தோழர்கள் ஆறுதல் கூறினர்.  

அர்ச்சுனனின் உடல் எவ்வித மதச் சடங்கும் இன்றி  குடும்பத் தாரின் இயக்க ஈடுபாட்டுடன் எளிய முறையில் அடக்கம் செய்யப் பட்டது!

No comments:

Post a Comment