மூடநம்பிக்கையால் விளைந்த கேடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 20, 2023

மூடநம்பிக்கையால் விளைந்த கேடு!

சூனியம் செய்ததாகக் கூறி கணவன், மனைவியை 

மரத்தில் கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்

சங்கரெட்டி, ஜூன் 20- தெலங்கானாவின் சங்கரெட்டியில் சூனியம் செய்ததாகக் கூறி கணவ னையும் மனைவியையும் கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த நிகழ்வு பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பான காட்சிப்பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த காட்சிப்பதிவில் கணவன் -- மனைவி மரத் தில் கட்டப்பட் டிருப்ப தையும் கிராம மக்கள் அங்கு கூடியிருப்பதையும் காண முடிகிறது. 

இரண்டு நாட்களுக்கு முன்பு சதாசிவப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொல்குரு கிராமத்தில் இந்த நிகழ்வு நடந்ததாக கூறப்படுகி றது.

யாதையா மற்றும் அவரது மனைவி ஷியா மம்மா இருவரும் சூனியம் செய்ததாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதையடுத்து கிராம மக் களில் சிலர் அவர்களது வீட்டுக்குள் புகுந்து அவர் களை இழுத்துச் சென்று அங்கு உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள் ளனர். இந்த நிலையில் இது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் இணையரை மீட்டனர்.

அவர்களுக்கு பலத்த காயம் ஏற்படவில்லை என்றும் இது தொடர் பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு வதாகவும் காவல்துறை ஆய்வாளர் நவீன் கூறினார்.

No comments:

Post a Comment