ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 20, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

20.6.2023

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* காந்தியார் அமைதிப் பரிசை சனாதன கொள்கை பரப்பும் கீதா பிரஸ்-க்கு மோடி அரசு அளிப்பது சர்ச்சை யைக் கிளப்பியுள்ளது.

தி டெலிகிராப்:

*  உ.பி. கோரக்பூரில் நடத்தப்படும் கீதா பிரஸ்-க்கு காந்தியார் அமைதி விருது என்பது உண்மையில் ஒரு கேலிக்கூத்து, இது சாவர்க்கர் மற்றும் கோட்சேவுக்கு விருது வழங்குவது போன்றது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்.

* நீட் தேர்வில் 550 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 64,520 ஆகும், இவர்களில் பெரும்பாலானவர்கள் டில்லி, கேரளா, மகாராட்டிரா, ராஜஸ்தான் மற்றும் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 400 மதிப்பெண் பெற்ற ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பு இருக்காது என தகவல்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment