கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 30, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

30.6.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

👉மணிப்பூரில் வன்முறை தொடர்கிறது. பாஜக அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

👉ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்திட மோடி ஆலோசனை.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

👉 ம.பி. மாநில பாடத்திட்டத்தில் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கர் பற்றிய பாடம் சேர்ப்பு.

👉 மணிப்பூர் முகாம்களில் மக்களை சந்திக்க சென்ற ராகுல் கார் நிறுத்தம். பின் ஹெலிகாப்டரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

👉 எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கண்டு பிரதமர் மோடிக்கு பயம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பேச்சு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் செய்த தனது உத்தரவை, கடும் எதிர்ப்பு காரணமாக, நிறுத்தி வைத்தார் ஆளுநர். ஒன்றிய அரசின் தலைமை வழக்குரைஞரிடம் கருத்து கேட்கப் போகிறாராம். (உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னால் இந்த ஞானம் இருந்திருக்க வேண்டும்).

👉 எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு ஜூலை 13-14 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என சரத்பவார் அறிவிப்பு.

தி டெலிகிராப்:

👉வெறுப்பு நிறைந்த சர்வாதிகாரி அன்பை கண்டு பயப்படுகிறார் என பிரதமர் மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment