கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 7, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

7.6.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

👉 கல்வியிலும் மக்கள் நலன் பேணுவதிலும் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது. மாநிலத்தின் இந்த வளர்ச்சி, மாநிலத்தின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவருக்கு மட்டும் புலப்படவில்லை. விமர்சனம் என்ற பெயரில் தினமும் ஏதாவது ஒரு செய்தியை சொல்லி மக்களை குழப்புகிறார். ஆனால் இதையெல்லாம் மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர் என ஆளுநரின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட்டால்தான் 2024இல் மக்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்கள் என சரத்பவார் பேச்சு.

தி ஹிந்து:

👉புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் 'அகண்ட பாரத்' வரைபடத்தில்  பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாட்டின் பகுதிகளையும் இணைத்து வெளியிட்டதற்கு மோடி அரசிடம் விளக்கம் கேட்கிறது வங்காளதேச அரசு.

தி டெலிகிராப்:

👉கருநாடகாவில் முந்தைய அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய பசுவதைத் தடைச் சட்டத்தை காங்கிரஸ் மறுபரிசீலனை செய்ய உள்ளது.

👉கர்நாடகா: அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அரசமைப்பின் முகப்புரை வாசிப்பு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மகா தேவப்பா வெளியிட்டார்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment