கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 18, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

18.6.2023

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉என்.சி.இ.ஆர்.டி.-இன் திருத்தங்கள், பாடப் புத்தகங்கள் எழுதப்பட்ட இலக்குகளை புறக்கணிக்கின்றன. அதை நாம் வெளிப்படுத்த வேண்டும். எனவே என் பெயர் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என கடிதம் எழுதியுள்ளேன் என்கிறார் இந்திய மேம்பட்ட படிப்பு கழகம், சிம்லா  மேனாள் இயக்குநர் பீட்டர் ரொனால்ட் டிசோசா

தி இந்து:

👉 மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களை நாசமாக்குகிறது. ஏழு பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து 3.84 லட்சம் வேலைகளை மோடி அரசு ஏன் பறித்தது? ஒன்றிய அரசில் பெண்களின் வேலை வாய்ப்பு 42% குறைந்தது ஏன்? ஒப்பந்த மற்றும் சாதாரண அரசு வேலைகள் ஏன் 88% அதிகரித்தன,” என மோடி அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கேள்வி.

👉 தங்கள் நில உரிமைக்கும், அடையாளத்திற்கும் குகிஸ் மக்கள் மணிப்பூரில் போராடுகிறார்கள் என்கிறார் கட்டுரையாளர் திக்‌ஷா முன்ஜால்

தி டெலிகிராப்:

👉டில்லி நேரு அருங்காட்சியகம் பெயரை மாற்றியது போல, மத்திய பிரதேசத்தில் நேரு பெயரில் இருந்த இரண்டு பூங்காக்கள் பெயரை முதலமைச்சர் சவுகானின் மகன்கள் பெயரில் மாற்றியது ம.பி. அரசு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட இனத்தவர் மற்றும் சிறுபான்மையினர் கூட்டணி தான் பாஜகவை வீழ்த்தும் சூத்திரம் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் பேச்சு.

👉 மணிப்பூர் வன்முறைக்கு ஆர்எஸ்எஸ் சித்தாந்தமும், பாஜகவின் அரசியலும் தான் காரணம் என்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்


- குடந்தை கருணா

No comments:

Post a Comment