'அஞ்சா நெஞ்சன்' அழகிரியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 25, 2023

'அஞ்சா நெஞ்சன்' அழகிரியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

‘அஞ்சா நெஞ்சன்' அழகிரியின்  123ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டையில், ‘அஞ்சாநெஞ்சன்' அழகிரி மணி மண்டபத்தில் உள்ள அவரது  சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில்  மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் பெ.வீரையன், பட்டுக்கோட்டை நகர தலைவர் பொறியாளர் சிற்பி சேகர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்  அ. ரத்தின சபாபதி, செயலாளர் புலவஞ்சி காமராஜ், மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் அ. அண்ணாதுரை, நகரச் செயலாளர் கா. தென்னவன், மாவட்ட ஆசிரியர் அணி தலைவர் என். நடராஜன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் ஜெகநாதன், செயலாளர் சண்முகவேல், பட்டுக்கோட்டை அழகிரி பேரன் சுப்பையா ராஜா ஆகியோர்  இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment