கல்லக்குறிச்சி கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 25, 2023

கல்லக்குறிச்சி கலந்துரையாடல் கூட்டம்

கல்லக்குறிச்சி, ஜூன் 25 - கல்லக் குறிச்சி கழக மாவட்ட சார்பில் சடையம்பட்டு கிளைக்கழக கலந்துரை யாடல் கூட்டம் 24.6.2023 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

மாநில மாணவர் கழக துணைச்செயலாளர் அவர்கள் இல்லத்தில் மாவட்ட கழக செயலா ளர் ச.சுந்தரராசன், மாவட்ட கழக துணைத் தலைவர் குழ.செல்வராசு ஆகி யோர் முன்னிலையில் மாவட்ட கழக இ.செயலா ளர் முத்துவேல் தொடக் கவுரையாற்ற மாவட்ட கழக இளைஞரணி தலை வர்கரிகாலன் மற்றும் தோழர்கள் கருத்துரை யாற்றினர். 

மேலும்  கலந்து கொண்ட தோழர்களின் கேள்விகளுக்கு பதிலளித் தும் தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்ட வரலாறு பற் றியும் மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு பற்றியும் தமிழ்நாட்டின் ஜாதிய பாகுபாடு பற்றியும் தெளி வாக விளக்கியும் மாவட்ட கழக தலைவர் வழக்குரை ஞர் கோ.சா.பாஸ்கர் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். 

முடிவில் மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் திராவிட புகழ் கலந்துகொண்ட தோழர்களுக்கு நன்றி கூறினார். மேலும் வரு கின்ற 23.7.2023 அன்று நமது மாவட்டம் சார்பில் நடைபெறும் ஒருநாள் பயிற்சி வகுப்பில் அதிக அளவில் தோழர்களை கலந்துகொள்ள செய்வது எனவும் சடையம்பட்டு கிளைக்கழக சார்பில் ஊரில் கழக கொடி ஏற்றி யும் தந்தைபெரியார் படிப் பகம் அமைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 

மேலும் கிளைக்கழக தலைவராக வழக்குரை ஞர் திராவிடகாந்தியும், செயலாளராக மருத்து வர் மகேந்திரன் ஆகி யோர்களை மாவட்ட கழக தலைவர் நியமனம் செய்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் திராவிட புகழ் தனது மகன் பிறந்த மகழ்வாக இனிப்பும், பிஸ் கட், தேநீர் வழங்கினர்.

No comments:

Post a Comment