விருத்தாசலம், ஜூன் 25- விருத்தாசலம் கழக மாவட்டம் ஆவட்டி குறுக்கு சாலை கல்லூரில் உள்ள சரஸ்வதி அறிவாலயம் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 25
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடக்க விழா நடைபெற்றது.
விருத்தாசலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ப.வெற்றிச்செல்வன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் அ. இளங்கோவன் தலைமை வைத்து பேசினார். மாவட்ட அமைப் பாளர் புலவர் வை. இளவரசன், மாவட் டத் துணைத் தலைவர் அ.பன்னீர் செல்வம், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் பி.பழனிச்சாமி, மாநில இளைஞரணி துணைச் செயலா ளர் கோ.வேலு, மாவட்ட இளைஞரணி செயலாளர் சே.பெரியார் மணி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து உரையாற்றினார். பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளரும், மாநில ஒருங்கிணைப் பாளருமான இரா.ஜெயக்குமார் பயிற்சி வகுப்பை நெறிப்படுத்தி உரையாற்றி னார்.
சாமி ஆடுதல், பேய் ஆடுதல் மற்றும் அறிவியல் விளக்கம் ஆகிய தலைப்பு களில் மருத்துவர் இரா.கவுதமன் முதல் வகுப்பினை எடுத்தார். பயிற்சி வகுப் பினை மாணவர்கள் ஆர்வமுடன் கவ னித்து, தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங் களை கேட்டு அறிந்து தெரிந்து கொண் டனர். இதில், 70 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து சமூக நீதி வரலாறு என்னும் தலைப்பில் சு.அறிவுக் கரசு, தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள் எனும் தலைப்பில் வழக்குரைஞர் சே.மே.மதிவதனி, சமூக ஊடகங்களில் நமது பங்கு என்னும் தலைப்பில் வி.சி.வில்வம், தமிழர் தலை வர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் சாதனை என்னும் தலைப்பில் முனைவர் க.அன்பழகன், பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு எனும் தலைப்பில் சு.அறிவுக்கரசு ஆகியோர் வகுப்புகளை எடுத்தனர்.
பொதுக்குழு உறுப்பினர் தங்க.இராசமாணிக்கம், பண்ணிட்டு நகர செயலாளர் அ.பச்சமுத்து, வேப்பூர் வட்டாரச் செயலாளர் ம.இளங் கோவன், விருத்தாசலம் நகர அமைப் பாளர் சு. காரல் மார்க்ஸ், பழனிவேல், திட்டக்குடி நகரத் தலைவர் அறிவு உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் வெங்கட .இராசா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment