பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத - பழிவாங்கும் எதேச்சதிகாரச் செயல் கோவையில் ஜூன் 16இல் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 15, 2023

பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத - பழிவாங்கும் எதேச்சதிகாரச் செயல் கோவையில் ஜூன் 16இல் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்!

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!

அமலாக்கத்துறையை ஏவி விட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை அராஜக முறையில் கைது செய்துள்ள பா.ஜ.க. வின் ஜனநாயக விரோத - மக்கள் விரோத பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டித்து கோவை மாநகர், சிவானந்தா காலனியில் நாளை (16.6.2023) மாலை 5.00 மணிக்கு மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இந்தக் கண்டனப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவோர் விபரம் வருமாறு:-

டி.ஆர்.பாலு, எம்.பி. பொருளாளர், தி.மு.க.

ஆசிரியர் கி.வீரமணி  தலைவர், திராவிடர் கழகம்

கே.எஸ்.அழகிரி  தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

வைகோ  பொதுச்செயலாளர், ம.தி.மு.க.

கே.பாலகிருஷ்ணன் 

செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழு

ஆர்.முத்தரசன் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநிலக் குழு

கே.எம்.காதர்மொகிதீன் 

தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

தொல்.திருமாவளவன்  தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர், மனித நேய மக்கள் கட்சி

ஈ.ஆர்.ஈஸ்வரன் பொதுச் செயலாளர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

தி.வேல்முருகன்  தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி

கூட்ட ஏற்பாடு : கோவை மாநகர் - கோவை வடக்கு - தெற்கு மாவட்ட தி.மு.க. 


No comments:

Post a Comment