டில்லி பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டம் காவிமயமாக்கப்படுகிறதா? காந்தியாருக்கு பதிலாக சாவர்க்கர் பற்றிய பாடமாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

டில்லி பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டம் காவிமயமாக்கப்படுகிறதா? காந்தியாருக்கு பதிலாக சாவர்க்கர் பற்றிய பாடமாம்

புதுடில்லி,மே30 - டில்லி பல் கலைக்கழக இளங்கலை (பி.ஏ.) அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 5ஆவது செமஸ்டரில் காந்தியார் குறித்து ஒரு பாடம் உள்ளது. இதை ரத்து செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு பதி லாக சாவர்க்கர் குறித்த பாடத்தை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் காந்தியார் குறித்த பாடம் 7ஆவது பருவமுறை தேர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இதனால் 3 ஆண்டு பட்டப் படிப்பை தேர்வு செய்யும் மாணவர் கள், காந்தி குறித்த பாடத்தை படிக்க இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக டில்லி பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு உள்ளது. பல்கலைக் கழக நிர்வாக கவுன்சில் இதற்கு ஒப்புதல் அளித்தால் இது அமல் படுத்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதே போல், பிரிட்டிஷ் இந்தி யாவில் பிறந்து பாகிஸ்தான் தேசிய கவிஞர் என புகழ் பெற்ற வரும், 'சாரே ஜஹான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா' பாடலை எழுதியவருமான முகமது இக்பால் பற்றிய பாடத்தையும் பாடத் திட்டத்தில் இருந்து நீக்க டில்லி பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது.

இது குறித்து கடந்த 26.5.2023 அன்று நடைபெற்ற கல்விக்குழு கூட்டத்தில் டில்லி பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் யோகேஷ் கூறுகையில், 'இந்தி யாவில் பிரிவினையை ஏற்படுத்துவ தற்கான அடித்தளத்தை இட்டவர் களுக்கு பாடத்திட்டத்தில் இட மில்லை' என்று கூறினார்.

அதே சமயம் டில்லி பல்கலைக் கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஒரு பிரிவு ஆசிரியர்கள், மாணவர் கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கல்வியை காவிமயமாக்கும் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment