ஒன்றிய அரசின் 12 துறைகளில் தனியார் நிபுணர்களாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

ஒன்றிய அரசின் 12 துறைகளில் தனியார் நிபுணர்களாம்

புதுடில்லி,மே30 - உலகமயமாக்கலுக்கு பிறகு அரசுத் துறைகளில் தனியார் முதலீடு அதிகரித்து வருகிறது. அதையும் தாண்டி அரசு துறைகளில் தனி யார் நிபுணர்களை சேர்க்கும் புதிய முறையை கொண்டு வந்து உள்ளது.

அந்த வகையில், தனியார் துறை யில் நிபுணர்களாக இருப்பவர் களை ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் நியமிக்கும் முறையை கடந்த 2018ஆம் ஆண்டு ஒன்றிய அரசு முதல் முறையாக தொடங்கி யது. 2ஆவது முறையாக கடந்த 2021ஆம் ஆண்டு 31 அதிகாரிகள் பல்வேறு அமைச்சகங்களில் நிய மிக்கப்பட்டனர். 

தற்போது 3ஆவது முறையாக ஒன்றிய அரசின் வேளாண் அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து, உரத்துறை உள் ளிட்ட 12 துறைகளுக்கு இணை மற்றும் துணை செயலாளர்கள்,  இயக்குநர்கள் என 20 பேரை தனி யார் துறையில் இருந்து நியமிக்க ஒன்றிய பணியாளர் தேர்வாணை யத்துக்கு ஒன்றிய பணியாளர் நலத் துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. 

இந்த பணிகுறித்த அறிவிப்பு ஒன் றிய பணியாளர் தேர்வாணை யத்தின் இணையதளத்தில் 20ஆம் தேதி வெளி யாகி உள்ளது. ஜூன் மாதம் 19ஆம் தேதி வரை விண்ணப் பிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment