இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 9, 2023

இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடில்லி, மே 9 - இஸ்லாமியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா தெரிவித்து வரும் கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இடஒதுக்கீட்டை அரசியலாக்க அனுமதிக்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் காட்டமாக கூறியது.

கருநாடகத்தில் முஸ்லிம்க ளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 4 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த தனி இடஒதுக்கீட்டை மாநில அரசு சமீபத்தில் ரத்து செய்வதாக அறிவித்தது. அதோடு முஸ்லிம்களுக்கு பதிலாக லிங்காயத், ஒக்கலிகர் சமூகங்களுக்கு சமமாக 4 சதவீத இடஒதுக்கீட்டை பிரித்து வழங்கு வதாக அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 4% இடஒதுக்கீட்டு ரத்து முடிவை அமல்படுத்தக் கூடாது என கருநாடகா அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கி இருந்தது உச்சநீதிமன்றம். கருநாடகா அரசும் 4% இடஒதுக் கீடு ரத்து அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள் ளப்படாது என உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்தது. இஸ்லாமியர் இடஒதுக்கீடு தொடர்பான இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலு வையில் உள்ளது. ஆனால் கரு நாடகா தேர்தல் பிரசாரத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச் சர் அமித்சா, இஸ்லாமியர்களுக் கான இடஒதுக்கீடு ரத்து செய்யப் பட்டுவிட்டது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என தொடர்ந்து பேசினார்.

இந்த நிலையில் இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசா ரணைக்கு வந்தது. இந்த விசார ணையின் போது, இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து தொடர்பாக அமித்சா தொடர்ந்து பேசி வரு வது குறித்து மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை யடுத்து, இஸ்லாமியர் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை யில் இருக்கும் போது பொது வெளியில் ஒன்றிய அமைச்சர் அமித்சா எப்படி பேசலாம்? வழக்கு விசாரணைக்காக நிலுவை யில் இருக்கும் போது அமித்சா இப்படி பேசியது தவறு; பொது வெளியில் மக்கள் பிரதிநிதிகள் பேசுகிற போது கவனத்துடன் பேச வேண்டும் என கடும் கண்ட னம் தெரிவித்தது. 

மேலும் இட ஒதுக்கீடு விவ காரத்தை அரசிய லாக்க அனு மதிக்கவும் முடியாது எனவும் உச்சநீதிமன்றம் திட்ட வட்டமாக தெரிவித்தது. இன்றைய விசார ணையின் போது கருநாடகா அரசு தரப்பில், 4% இடஒதுக்கீடு ரத்து என்ற புதிய முடிவின் அடிப் படை யில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என மீண் டும் உறுதியளிக்கப்பட்டது. 

இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment