உலக அளவில் கரோனா வைரசால் பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 23, 2023

உலக அளவில் கரோனா வைரசால் பாதிப்பு

வாஷிங்டன், மே 23   உலகம் முழுவதும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 90 லட்சத்து 22 ஆயிரத்து 601 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 7 லட்சத்து 30 ஆயிரத்து 165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 66 கோடியே 14 லட்சத்து 11 ஆயிரத்து 775 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 68 லட்சத்து 80 ஆயிரத்து 661 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா: இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு   நேற்று (22.5.2023)   473 ஆக இருந்த நிலையில் இன்று 405 ஆக சரிந் துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 87 ஆயிரத்து 339 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 920 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 48 ஆயிரத்து 392 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 7,104 ஆக சரிந்துள்ளது. இது நேற்றை விட 519 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் நேற்று சத்தீஸ்கர், உத்தரகாண்ட், மேற்கு வங்கத்தில் தலா ஒருவர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட ஒரு மரணம் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை தொற்றுக்கு பலியானவர்கள் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 843 ஆக அதிகரித்துள்ளது.


No comments:

Post a Comment