இந்தியாவிலேயே முதலிடம் அதிக மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 29, 2023

இந்தியாவிலேயே முதலிடம் அதிக மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம்

சென்னை, மே 29 - தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு  ஆகியோர் 27.5.2023 அன்று சென்னை டுமீங்குப்பத் தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத் தின் கீழ், சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பய னாளிகள் பதிவு செய்யும் முகாமினை தொடங்கி வைத்தனர்

பின்னர் செய்தியாளர்களிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது;  தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ் வுத் துறையின் சார்பில் பல்வேறு மருத்துவ முகாம்கள் தொடர்ச்சி யாக நடைபெற்று கொண்டிருக் கிறது. குறிப்பாக வருமுன் காப் போம் முகாம்கள், கலைஞரின் வருமுன் காப்போம் என்ற பெயரில் கடந்த 2 ஆண்டுகளாக மிகச் சிறப்பான வகையில் தமிழ் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஒன்றியத் திற்கும் 3 என்ற வகையிலும், மாநகராட்சிக்கு 4 இடங்களிலும், சென்னை மாநகராட்சியில் 15 இடங்களுமாக மொத்தம் 1250 இடங்களில் ஒவ்வொரு ஆண் டும் நடத்தப்படும் என்று அறி விக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டதை காட்டிலும் கூடுதலாக நடத் தப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் தமிழ்நாடு முழுவதும் மிகச் சிறப்பாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் சென்னையை பொறுத்தவரை குடிசைப் பகுதிகளை மய்யமாக வைத்து முகாம்கள் நடத்துவது என்று முடிவெடுத்து, மரியாதைக்குரிய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்களுடைய ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் காப் பீட்டுத் திட்டத்தின் கீழ் பணி யாற்றிவரும் மருத்துவமனை களை கொண்டு ஒவ்வொரு வாரமும் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே பெரும்பாக்கம், கண்ணகி நகர் போன்ற பல்வேறு இடங்களில் இதுபோன்ற முகாம்கள் நடைபெற்றுள்ளது. அந்தவகையில் இன்று நொச்சி நகர், நொச்சி குப்பம், டூமிங் குப்பம் போன்ற பல்வேறு கடற் கரைவாழ் மீனவர் பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்களை பொறுத்த வரை அரசு மருத்துவமனைகளை சேர்ந்த ஓமந்தூரார் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இராயப் பேட்டை அரசு பொது மருத்து வமனை, கீழ்பாக்கம் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கஸ் தூரிபாய் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகிய மருத்து வமனைகளோடு பெருநகர சென்னை மாநகரட்சியின் மருத் துவப் பிரிவு, தனியார் மருத்து வமனைகளான வெங்கடேஸ் வரா மருத்துவமனை, மாதா மருத்துவமனை ஆகிய மருத்து வமனைகள் ஒருங்கிணைக்கப் பட்டு இந்த முகாம்கள் நடத் தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த முகாம்களை இரத்த அழுத்தம், சிறுநீரகம், எக்கோ, இ.சி.ஜி, முழுஇரத்த பரிசோ தனை, தொழுநோய் கண்டறிதல், காசநோய் கண்டறிதல், கருப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல் போன்ற பல்வேறு பரிசோதனை கள் செய்யப்பட்டு கொண்டிருக் கிறது. அதோடு மட்டுமல்லாது 40 மேற்பட்ட மருத்துவர்கள் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, கண் மருத் துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவ ஆலோசனைகள் என்று பல்வேறு வகையான மருத்துவ ஆலோசனைகளும் இங்கே வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மருத்துவ முகாம்கள் மூலம் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந் துள்ளனர். குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் ஏராளமா னோர்கள் இந்த மருத்துவ முகாம்கள் மூலம் பயனடைந்து ள்ளனர்.

மருத்துவக் காப்பீடு தமிழ் நாட்டை பெறுத்தவரை முதல மைச்சரின் காப்பீட்டுத் திட்டத் தின் கீழ் மிகச்சிறப்பான வகை யில் 1779 மருத்துவமனைகளில் செய்யப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளை பொறுத்த வரை இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் அதிக மருத்துவ மனைகளில் (811 அரசு மருத்தவ மனைகள்) இந்த திட்டம் செயல் படுத்தப்பட்டு கொண்டிருக்கி றது. தனியார் மருத்தவமனை களை பொறுத்தவரை 968 மருத் துவமனைகளில் இந்த காப்பீட் டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. 1.40 கோடி குடும்பங்கள் ஆண்டொன்றிக்கு தலா ரூ. 5 இலட்சம் வீதம் பயன்பெற்று வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்ற வகையில் இந்த மருத்துவ காப் பீட்டுத் திட்டத்தின் கீழ் எறத் தாழ ரூ.22 இலட்சம் அளவிற்கு பயன்பெற்று வருகிறார்கள். இரு தய மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, கணையம் மாற்றும் அறுவை சிகிச்சை, தோல் மாற்று அறுவை சிகிச்சை எலும்பு மாற்று அறுவை சிகிச்சை எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை கண் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை என்று பல வகைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறார்கள். புதியதாக இந்த காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினர்கள் சேர்கை செய்யும் வகையில் இந்த முகாம் நடத்தப் பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.ல் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம்

No comments:

Post a Comment