மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 20, 2023

மறைவு

கிருட்டினகிரி மாவட்ட கழக மேனாள் தலைவரும், மேனாள் தலைமை செயற்குழு உறுப் பினருமான காவேரிப் பட்டணம் சுயமரியாதைச் சுடரொளி தா. திருப்பதியின் மூத்த மகன், பணி நிறைவு பெற்ற கிருட்டினகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை (ஆர்.எம்.ஒ.) மக்கள் மருத்துவர் தி.வள்ளல் (வயது 65) சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டு 19.5.2023 மாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். 

அன்னாரது உடல் காவேரிப்பட்டணம் வி. எஸ். கே. என். நகர் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று (20.5.2023) பிற்பகல் தேவர்முக்குளம்  அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கிருட்டினகிரி மாவட்ட திரா விடர் கழகம் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

No comments:

Post a Comment