சிதம்பரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

சிதம்பரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

சிதம்பரம், மே 30- சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 28.5.2023 ஞாயிறு மாலை 6 மணியளவில் குமாரகுடி சுய மரியாதை வீரர் மீனாட்சிசுந் தரம் வளாகத்தில் தி.க.பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். அனைவரையும் வர வேற்று மாவட்ட ப.க. தலைவர் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கோவி.நெடுமாறன் வரவேற்பு ரையாற்றினார்.

திருமுட்டம் ஒன்றிய தலைவர் கு.பெரியண்ணசாமி, காட்டுமன்னார்குடி ஒன்றிய தலைவர் இரா.செல்வகணபதி, காட்டுமன்னார்குடி ஒன்றிய செயலாளர் ப.முருகன், ஆண்ட பாளையம் பஞ்சநாதன், காட்டு மன்னார்குடி நகர தலைவர் பொன்.பஞ்சநாதன், பரங்கிப் பேட்டை ஒன்றிய செயலர் துரை.ஜெயபால், தொழிலா ளர் அணி அமைப்பாளர் தெ. ஆறுமுகம், தேவதாஸ், இளை ஞரணி செயலாளர் அ.சுரேஷ், மாவட்ட மகளிரணி தலைவர் சுமதி பெரியார்தாசன், காட்டு மன்னார்குடி ஆனந்தவீரன், காட்டுமன்னார்குடி ஒன்றிய அமைப்பாளர் கீழ்கடம்பூர் சண்முகசுந்தரம், பாளையங் கோட்டை தமிழரசன் ஆகி யோர் உரையாற்றிய பின் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

தீர்மானம் 1: ஈரோட்டில் கடந்த 13.5.2023 அன்று நடை பெற்ற பொதுக்குழு தீர்மானங் களை முழு அளவு நிறைவேற் றுவதென தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 2: சிதம்பரம் கழக மாவட்டத்தில், 6 ஒன்றி யங்களிலும், நகராட்சி பகுதியி லும், வைக்கம் நூற்றாண்டு விழா - சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - பிரச்சார கூட்டங்களை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 3: சென்ற ஆண்டு அளிக்கப்பட்ட ‘விடுதலை’ சந் தாக்களை மீண்டும் புதுப்பிப் பது மற்றும் புதிய சந்தாக்களை சேர்ப்பது எனவும் - ‘உண்மை’, ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ ஆகிய ஏடுகளுக்கும் சந்தா சேர்ப்பது என்று தீர்மானிக்கப் பட்டது.

பிரச்சாரத் திட்ட பட்டியல்

ஒன்றியம், கூட்டம் நடைபெறும் நாள்/ ஊர், தலைமை/முன்னிலை மற்றும் சிறப்புரை விவரம் வருமாறு:

1. காட்டுமன்னார்குடி - 9.6.2023 காட்டுமன்னார்குடி - இரா.செல்வகணபதி (ஒன்றிய தலைவர்), ப.முருகன் (ஒன்றிய செயலாளர்), பொன்.பஞ்சநாதன் (நகர தலைவர்) - யாழ்.திலீபன், கோவி.பெரியார் தாசன், காட்டுமன்னார்குடி, நகர தலைவர், பொன்.பஞ்சநாதன்.

2. குமாராட்சி - 10.6.2023 குமாராட்சி - அன்பு.சித்தார்த் தன் (மாவட்ட செயலாளர்), ப.பால்ராஜ் (ஒன்றிய தலைவர்) -- யாழ்.திலீபன், கோவி.பெரியார்தாசன்.

3. பரங்கிப்பேட்டை - 11.6.2023 பி.முடலூர் - கு.தென் னவன் (மாவட்ட அமைப்பா ளர்), துரை.செயபால் (ஒன்றிய செயலாளர்) - யாழ்.திலீபன், கோவி.பெரியார்தாசன்.

4. கீரப்பாளையம் - 16.6.2023 கீரப்பாளையம் - கோவி.நெடு மாறன் (மாவட்ட ப.க. தலை வர்), அ.சுரேஷ் (மாவட்ட செய லாளர், தொழிலாளர் அணி) - யாழ்.திலீபன், கோவி.பெரியார்தாசன்.

5. திருமுட்டம் - 17.6.2023 -சோழத்தரம் (அ) திருமுட்டம் - கு.பெரியண்ணசாமி (ஒன்றிய தலைவர்), இரா.இராசசேகரன் (ஒன்றிய செயலாளர்), சுமதி.பெரியார்தாசன் (மகளிரணி தலைவர்) - யாழ்.திலீபன், கோவி.பெரியார்தாசன்.

6. புவனகிரி - 18.6.2023 புவனகிரி - ஏ.பி.ராமதாஸ் (ஒன்றிய தலைவர்), ஆசீர்வாதம் (நகர தலைவர்), யாழ்.சுபா (மகளிர் பாசறை) - முனைவர் துரை.சந்திரசேகரன், (தி.க. பொதுச்செயலாளர்), யாழ்.திலீபன்.

7. திருமுட்டம் - 23.6.203 குமாரகுடி, சேத்தியாதோப்பு - தெ.ஆறுமுகம் (தொழிலாளர் அணி தலைவர்) தேவதாஸ் (தொழிலாளர் அணி அமைப்பாளர்), ப.இராசசேகரன் (நகர தலைவர், சேத்தியாதோப்பு) - யாழ்.திலீபன், கோவி.பெரியார்தாசன்.

8. கீரப்பாளையம் - 24.6.2023 மதுராந்தகநல்லூர் - பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), வை.காமராஜ் (தி.மு.க. கிளை செயலாளர்) - யாழ்.திலீபன், கோவி.பெரியார்தாசன்.

இறுதியாக, மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment