பொறியியல் கல்லூரி-கலந்தாய்வு ஜூலை 2இல் தொடங்கும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 20, 2023

பொறியியல் கல்லூரி-கலந்தாய்வு ஜூலை 2இல் தொடங்கும்

அமைச்சர் முனைவர் க.பொன்முடி அறிவிப்பு

சென்னை, மே 20- பொறியியல் படிப் புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் என்றுஅமைச்சர் க.பொன்முடி அறிவித்தார்.

இதுகுறித்து சென்னை தலை மைச் செயலகத்தில் நேற்று (19.5.2023) செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி கூறியதாவது:

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந் தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது மாண வர்கள் நலன்கருதி அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கலந்தாய்வு ஒருமாதம் முன்ன தாகவே ஜூலை 2இல் தொடங்கி செப்.3ஆம் தேதிவரை இணைய வழியில் நடைபெறும்.

சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 2 முதல் 5ஆம் தேதி வரை யும், பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஆக.24ஆம் தேதி வரையும் நடத்தப்படும். துணைக் கலந்தாய்வு ஆக.28இல் தொடங்கி 30ஆம் தேதி நிறைவு பெறும். எஸ்சி காலியிடங்களுக்கான கலந்தாய்வு செப்.1, 2, 3ஆம் தேதிகளில் நடை பெறும்.

இதற்கேற்ப விண்ணப்பித்த மாணவர்களின் ரேண்டம் எண் ஜூன் 6ஆம் தேதி வெளியாகும். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஜூன் 5முதல் 20ஆம் தேதி வரை நடத்தப்படும். மேலும், தரவரிசைப் பட்டியல் ஜூன் 26இல் வெளியிடப்படும். அதில் ஏதும் தவறுகள் இருந்தால், அதன் புகார்களை ஜூன் 26 முதல் 30ஆம் தேதி வரை சேவை மய்யங்களில் தெரிவித்து நிவாரணம் பெறலாம்.

பாலிடெக்னிக் கல்லூரிகள்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இன்று (மே 20) முதல் தொடங்குகிறது. இதற்கான பதிவுக் கட்டணம் ரூ.150, எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை.

விருப்பமுள்ளவர்கள் <www.tnpoly.in> என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பகுதி நேர படிப்புகளில் சேரவும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 4 ஆண்டுகள் படிக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் ஒவ் வொரு விதமாக விண்ணப்பக் கட் டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை மாற்றப்பட்டு இனி அனைத்து பல்கலைக் கழகங் களிலும் ஆண்டுக்கு ரூ.200மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூலம் பெற்றோர்களின் நிதிச்சுமை குறையும். 

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment