கருநாடக தேர்தல் - 2023 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 14, 2023

கருநாடக தேர்தல் - 2023

திராவிட நிலப்பகுதியிலிருந்து 

பிஜேபி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமான கருத்து

சென்னை,மே14- "திராவிட நிலப்பகுதியி லிருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டு பழி வாங்கும் அரசியலுக்கு தக்க பாடம் புகட்டப் பட்டுள்ளது" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கருநாடக மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்£ர்.

கருநாடக மாநில பொதுத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடித்து வெற்றி பெற்றதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

 "பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது" என்று கருநாடக தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கருநாடகத்தில் மிகச் சிறப்பான வெற் றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கருநாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தியை, நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, ஹிந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத் தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.

திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இந்தியாவில் மக்களாட்சியையும், அரசமைப்பு விழுமியங் களையும் மீட்போம்", என்று அவர் பதிவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment