நாகை மாவட்டத்தில் கழகத் தோழர்களுடன் சந்திப்பு - ஒக்கூர் கிளைக் கழகக் கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 19, 2023

நாகை மாவட்டத்தில் கழகத் தோழர்களுடன் சந்திப்பு - ஒக்கூர் கிளைக் கழகக் கலந்துரையாடல்

ஒக்கூர், ஏப். 19- கீழ்வேளூர் ஒன்றியம், ஒக்கூர், திராவிடர் கழக கிளைகழக கலந்துரையாடல் கூட்டம் 16-4-2023 ஞாயிறு மாலை 4 மணியளவில் ஒக்கூர் கிராம திருமண மண்ட பத்தில்  நடைபெற்றது 

கூட்டத்திற்கு தலைமையேற்று கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் இயக்க செயல் பாடுகள் மற்றும்  வைக்கம் நூற் றாண்டு விழா கிராமப் பிரச்சாரம், இயக்கத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண்டின் சிறப்புகள்,எதிர்பார்ப்புகள், கழகத்தோழர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தன்முனைப்பு இல் லாமல் இயக்கம் தலைவர் இவற்றை முன்னிலைப்படுத்தி அனைத்து தோழர்களும் இணைந்து செயல் பட வேண்டியதன் அவசியம் குறித்து  உரையாற்றினார் 

ஒன்றியச்செயலாளர் பன்னீர் செல்வம் வரவேற்று உரையாற்றினார்

தொடர்ந்து, மாவட்ட அமைப் பாளர் பொன்.செல்வராசு, மாவட்ட துணைச்செயலாளர் துரைசாமி, மண்டல இளைஞரணி செயலா ளர் நாத்திக பொன்முடி, பொதுக் குழு உறுப்பினர் கமலம், பொதுக் குழு உறுப்பினர் நாகை நகரத் தலைவர் தெ.செந்தில்குமார், நாகை நகர அமைப்பாளர் சண். இரவி. மாவட்ட மகளிரணி தலை வர் பேபி, ஒன்றியத் தலைவர் வேணுகோபால், ஒன்றிய துணைச் செயலாளர் இராஜேந்திரன், ஒன் றிய துணைத் தலைவர் அரங்கராசு, ஒக்கூர் ராஜு, இலட்சுமி, அ.சகிலா, பக்கியம்மாள், வசந்தா, சுசிலா, சரோஜா, வசந்தி, வசந்தா, சுகிலா, லலிதா, ஜவகர்லால், மகேந்திரன், ஷிஅழகர் வி.அழகர் ஆகியோர் கழக செயல்பாடுகள் குறித்து உரை யாற்றினார்கள்,

கூட்டத்திற்கு முன்னிலை வகித்த திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலி யன், மாவட்ட செயலாளர் ஜெ. புபேஸ்குப்தா ஆகியோர் நாகை மாவட்டத்தில் இதுவரை நடந்த இயக்க செயல்பாடுகள் 2023 ஆண்டில் செய்ய திட்டமிட்டுள்ள திட்டங்கள், கிராமங்கள்தோறும் பிரச்சாரம் நடத்திட கழகத் தோழர்கள் முனைய வேண்டும் என உரையாற்றினர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்- பாக்கியராஜ் நன்றி கூறினார்

ஒக்கூர் சித்தார்த்தன், மோகன் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது

* சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணம் 4 கட்டங்களாக தமிழ்நாடு, புதுவை இரண்டு மாநிலங்களில் 30 நாட்கள்  57 பொதுக் கூட்டங் களில் உரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய தமிழர் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் நன் றியை தெரிவித்து கொள்கிறது

* தந்தைபெரியாரின் மனித உரிமை போர் வைக்கம் போராட்ட 100 ஆவது ஆண்டு விழா தெரு முனை கூட்டங்களை நாகை மாவட் டத்தில் அனைத்து ஒன்றியங்களும் கிராம பிரச்சாரமாக  நடத்துவது

* அனைத்து பகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்து  கழக அமைப்புகளை புதுப்பிப்பது,

*விடுதலை சந்தாக்களை புதுப் பித்து வழங்குவது

* இளைஞர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரு நாள் பெரியாரியல் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது

* டெல்டா மாவட்டங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க முயற் சித்த ஒன்றிய அரசின் முடிவை போராடி தடுத்து நிறுத்தி  டெல்டா பகுதி விவசாயத்தை பாதுகாத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும்  இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது

* மே - 7 தாம்பரத்தில் நடை பெறும் திராவிடர் கழக தொழி லாளரணி  மாநில மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்பது

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதுப்பிக்கப்பட்ட கீழ்வேளூர் ஒன்றிய, ஒக்கூர் கிளைக் கழகப் பொறுப்பாளர்கள்

கீழ்வேளூர் ஒன்றிய மகளிரணி செயலாளர்: இரா. இலட்சுமி

மகளிர் பாசறை ஒன்றிய அமைப்பாளர் :அ.சகிலா

ஒக்கூர் கிராமத் தலைவர்:ஒக்கூர் இராஜேந்திரன்

கிராம செயலாளர்:சி இராஜு

மகளிரணி கிளைத்தலைவர்: அமுதா

மகளிரணி கிளை செயலாளர்: வசந்தி

No comments:

Post a Comment