குருக்கத்தி கிளைக் கழகக் கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 19, 2023

குருக்கத்தி கிளைக் கழகக் கலந்துரையாடல்

குருக்கத்தி, ஏப். 19- கீழ்வேளூர் ஒன்றியம், குருக்கத்தி, இராதாரிமங்கலம், ஒதியத்தூர், பரங்கிநல்லூர், ஆசாத் நகர், புத்தர் மங்கலம் வடக்குவெளி ஆகிய ஊர்களின்  திராவிடர் கழக கிளைகழக கலந்துரையாடல் கூட்டம் 16-4-2023 ஞாயிறு காலை 10.30 மணியளவில் குருக்கத்தி பாவா.ஜெயக்குமார் தோட்டத்தில் நடைபெற்றது 

கூட்டத்திற்கு தலைமையேற்று கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் இயக்க செயல்பாடு கள் மற்றும்  வைக்கம் நூற்றான்டு விழா கிராமப் பிரச்சாரம், இயக்கத் தில் புதிய உறுப்பினர்களை சேர்ப் பது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண்டின் சிறப்பு கள், எதிர்பார்ப்புகள், கழகத் தோழர்கள் அர்ப்பணிப்பு உணர்வு டன் தன்முனைப்பு இல்லாமல் இயக்கம் தலைவர் இவற்றை முன் னிலைப்படுத்தி அனைத்து தோழர் களும் இணைந்து செயல்பட வேண்டியதின் அவசியம் குறித்து  உரையாற்றினார் 

ஒன்றியத்தலைவர் துரைசாமி, வரவேற்று உரையாற்றினார்

தொடர்ந்து, மாவட்ட அமைப் பாளர் பொன்.செல்வராசு, மாவட்ட துணைச் செயலாளர் பாவா.ஜெயக்குமார்,மண்டல இளைஞ ரணி செயலாளர் நாத்திக பொன் முடி, பொதுக்குழு உறுப்பினர் கமலம், பொதுக்குழு உறுப்பினர் நாகை நகரத்தலைவர் தெ.செந் தில்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.பாக்கியராஜ், நாகை நகர அமைப்பாளர் சண். இரவி. மாவட்ட மகளிரணி தலை வர் பேபி, மேனாள் மாவட்ட செய லாளர் வேணுகோபால், ஒன்றிய செயலாளர் பன்னீர் செல்வம், ஒன்றிய துணைத் தலைவர் அரங் கராசு, வட்டார விவசாய அணி செயலாளர் குருக்கத்தி தமிழ் செல்வன், இராயத்தமங்கலம் இரா மசாமி, குருக்கத்தி கோபால் குருக் கத்தி பேபி, முத்துலெட்சுமி, ஆகி யோர் கழக செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார்கள்,

கூட்டத்திற்கு முன்னிலை வகித்த திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலி யன், மாவட்ட செயலாளர் ஜெ. புபேஸ்குப்தா ஆகியோர் நாகை மாவட்டத்தில் இதுவரை நடந்த இயக்க செயல்பாடுகள் 2023 ஆண்டில் செய்ய திட்டமிட்டுள்ள திட்டங்கள், கிராமங்கள்தோறும் பிரச்சாரம் நடந்திட கழகத் தோழர்கள் முனைய வேண்டும் என உரையாற்றினர்

மாவட்ட இளைஞரணி அமைப் பாளர்- பாக்கியராஜ் நன்றி கூறினார்

குருக்கத்தி நடராஜன், இரா யத்தமங்கலம் மகிலம்மாள், இரா தாநல்லூர் சுந்தர்ராஜு ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக் கப்பட்டது

  * சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணம் 4 கட்டங்களாக தமிழ்நாடு, புதுவை இரண்டு மாநிலங்களில் 30 நாட் கள்  57 பொதுக்கூட்டங்களில் உரையாற்றி விழிப்புணர்வை ஏற் படுத்திய ஆசிரியர்க்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்து கொள்கிறது

* தந்தைபெரியாரின் மனித உரிமை போர் வைக்கம் போராட்ட 100 ஆவது ஆண்டு சிறப்பு தெரு முனை கூட்டங்களை நாகை மாவட் டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் கிராம பிரச்சாரமாக  நடத்துவது

* அனைத்து பகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்து  கழக அமைப்புகளை புதுப்பிப்பது,

*விடுதலை சந்தாக்களை புதுப் பித்து வழங்குவது

* இளைஞர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரு நாள் பெரியா ரியல் பயிற்சி வகுப்புகளை நடத்து வதற்கு திட்டமிடப்பட்டது

* டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க முயற்சித்த ஒன்றிய அரசின் முடிவை போராடி தடுத்து நிறுத்தி  டெல்டா பகுதி விவசாயத்தை பாதுகாத்த தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களுக்கும் தமிழ்நாடு முத லமைச்சர் அவர்களுக்கும்  இக்கூட் டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது

* மே - 7 தாம்பரத்தில் நடை பெறும் திராவிடர் கழக தொழி லாளரணி  மாநில மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்பதென முடிவு எடுக்கப்பட்டது.


புதுப்பிக்கப்பட்ட மாவட்ட, கீழ்வேளுர் 

ஒன்றிய, கிளைக் கழகப் புதிய பொறுப்பாளர்கள்

நாகை மாவட்ட துணைத் தலைவர் : பா.ஜெயக்குமார்

நாகை மாவட்ட துணைச்செயலாளர்: ரெ.துரைசாமி

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்: பாக்கியராஜ்

கீழ்வேளூர் ஒன்றியத் தலைவர்: தெ.வேணுகோபால்

ஒன்றிய செயலாளர்: அ.பன்னீர்செல்வம்

ஒன்றிய அமைப்பளர்: பாஸ்கரன்

ஒன்றிய துணைத் தலைவர்: அ. அரங்கராசு

ஒன்றியது துணைச் செயலாளர்:  ஒக்கூர் இராஜேந்திரன்

வட்டார விவசாய அணி செயலாளர்:  குருக்கத்தி தமிழ்செல்வன்

:ஒன்றிய மகளிரணி தலைவர் ஜி.மல்லிகா,

ஒன்றிய இளைஞரணி தலைவர்:  பா.பாலாஜி

ஒன்றிய மாணவர் கழக தலைவர்: மு.அறிவுக்கரசன்

குருக்கத்தி கிளைத்தலைவர் : சவு.அறிவு

இராயத்தமங்கலம் கிளைக்கழகத் தலைவர்: தமிழரசன்

பரங்கிநல்லூர் கிளைத்தலைவர்: த. சந்திரன்

ஆசாத்நகர் கிளைத்தலைவர்: பன்னீர்

இராதாநல்லூர் கிளைத்தலைவர் : கணேசன்

நீலாப்பாடி கிளைத்தலைவர்: த.பாலு

No comments:

Post a Comment