தமிழ்நாட்டிலும் புத்தக நாள் கொண்டாட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 24, 2023

தமிழ்நாட்டிலும் புத்தக நாள் கொண்டாட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை, ஏப். 24- அய்ரோப்பிய நாடுகளைப் போல தமிழ்நாட்டிலும் புத்தக நாள் கொண்டாடப் படும் என அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் சென்னை மாநகர நூலக ஆணைக் குழு சார்பில் “உலக புத்தக நாள் விழா-2023” சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவ நேய பாவாணர் மாவட்ட மய்ய நூலகத்தில் நேற்று (23.4.2023) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண் டியன், பொது நூலக இயக்குநர் இளம்பகவத், இயக்குநரும், எழுத் தாளருமான பாரதி கிருஷ்ண குமார் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப் பிரமணியன் பேசியதாவது:  நான் மேயராக இருந்தபோது 'மேயர் என்பது பதவி அல்ல - _பொறுப்பு' என்ற புத்தகத்தையும், மராத்தான் குறித்த 'ஓடலாம் வாங்க' என்ற புத்தகத்தையும் எழுதினேன்.

அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும் தமிழ்நாட்டில் கரோனா கால அனுபவங்களை, ஒரு புத்தக மாக எழுத வேண்டும் என்பதற்காக தகவல்களைச் சேகரித்து வருகி றேன். இன்னும் 3 மாதங்களில் புத்தகத்தை எழுத இருக்கிறேன்.

சென்னையில் மட்டுமே புத் தகக் கண்காட்சி நடைபெறும் சூழ்நிலை மாறி, ஒவ்வொரு மாவட் டத்திலும் புத்தகக் கண்காட்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. மேலும் அய்ரோப்பிய நாடுகளில் புத்தக நாள் கொண்டா டப்படுவதைப் போன்ற ஒரு நிலை தமிழ்நாட்டுக்கும் வரும் என்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்து கிறேன்.

மதுரையில் மிகப்பெரிய நூல கம் அமைக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் அதை மிக விரைவில் மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார். மிகச் சிறந்த நூல்களின் எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment