செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 23, 2023

செய்திச் சுருக்கம்

மாற்றம்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், வழக்குகள் தேக்க மடைவதை தவிர்க்க, அமர்வுகள் மாற்றிய மைக்கப்பட்டுள்ளன.

விசா

இந்தியர்களுக்கு இந்தாண்டில் 10 லட்சத்தும் மேற்பட்ட எச்-1பி மற்றும் எல் விசாக்கள் வழங் கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சர் டொனால் டு லூ தெரிவித்துள்ளார்.

நீக்கம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கையை 20.4.2023 அன்று முதலமைச்சர் தாக்கல் செய்தார். அதன்மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் 21.4.2023 அன்று பதிலளித்து காவலர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இதை விமர்சிக்கும் வகையில் சமூக வலை தளங்களில் மீம்ஸ் மற்றும் வீடியோ வெளியிட்ட இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர்.

திட்டம்

பயணிகள் தங்கள் உடைமைகள் சோத னைக்காக, வரிசையில் காத்திருப்பதைதவிற்கும் வகையில், 20 மெட்ரோ ரயில் நிலையங்களில் தலா ஒரு ஸ்கேனர் பரிசோதனை இயந்திரம் நிறுவ சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்.


No comments:

Post a Comment