காவிரி டெல்டா மண்டலத்தில் நிலக்கரி சுரங்கமா?: இரா. முத்தரசன் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 7, 2023

காவிரி டெல்டா மண்டலத்தில் நிலக்கரி சுரங்கமா?: இரா. முத்தரசன் கண்டனம்

சென்னை, ஏப். 7- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்  வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரிப் படுகைப் பகுதியில் படிப்படியாக தொடர்ந்து மேலும் ஆறு நிலக்கரி சுரங்கங்கள் அமைக் கும் திட்டம் இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி ஒட்டு மொத்த டெல்டா பகுதியையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள் ளதுடன் கடுமையான பதற்றத்தை உருவாக்கியுள்ளது. 

மேலும், நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம்  ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்த படும் என்ற செய்தி. விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்கள் வாழ்வில் விழுந்த பேரிடியாக அமைந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டு காவிரிப் படுகை பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணி களுக்கான ஆய்வுப் பணிகளும் நடக்காமல் தடுக்க வேண்டும். இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு வலுவாக அழுத்தம் தர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment