ஏஅய்சிடிஇ-ன் புதிய ஆண்டு கால அட்டவணை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 7, 2023

ஏஅய்சிடிஇ-ன் புதிய ஆண்டு கால அட்டவணை வெளியீடு

சென்னை, ஏப். 7- பொறியியல் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள் செப்டம்பர் 15ஆம் தேதிமுதல் தொடங்கப்பட வேண்டும் என்று ஏஅய்சிடிஇ அறி வுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு கல்வியாண்டும் கல்லூரிகள் திறப்பு, பருவத்தேர்வு நடத்தப்படும் தேதிகள் உள்ளிட்ட விவரங்கள் அடங் கிய வருடாந்திர கால அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஅய்சிடிஇ) வெளியிட்டு வருகிறது. அதன்படி வரும் கல்வியாண் டுக்கான(2023-2024) காலஅட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை ஏஅய்சிடிஇ தற்போது வெளியிட்டுள் ளது. 

அதன் விவரம் வருமாறு:

தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்க ளுக்கு ஏஅய்சிடிஇ சார்பில் அங்கீகார நீட்டிப்புக்கான அனுமதி வழங்கும் பணிகள் ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவு பெறும். தொடர்ந்து கல்லூரி களுக்கு அங்கீகார நீட்டிப்பு வழங்கு தலை ஜூலை 31ஆம் தேதிக்குள் பல் கலைக்கழகங்கள் உறுதிசெய்ய வேண் டும். சேர்க்கை கலந்தாய்வை முடித்து முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும்.

தொலைதூர, திறந்தநிலை மற்றும் இணையவழிப் படிப்புகளைக் கற்றுத் தரும் நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை செயல்பாடுகளில் யுஜிசி வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

பொறியியல் கலந்தாய்வை நடத்துவதற்கான தேதி விவரங்கள் குறிப்பிடப் படவில்லை.

No comments:

Post a Comment