சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன் தலைமையில் மாணவர் சேர்க்கை தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 25, 2023

சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன் தலைமையில் மாணவர் சேர்க்கை தீவிரம்

சென்னை,ஏப்.25- கடந்த இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தியதைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக திமுக மருத்துவர் அணி செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய டாக்டர் எழிலன் நாகநாதன் தலைமையில் மாணவர் சேர்க்கை வழிகாட்டு முகாம் நடைபெற்றது.

கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் இலவசக் கல்வியைப் பெற்றிட மாணவர் சேர்க்கை வழிகாட்டு முகாம், ஆயிரம் விளக்கு  மாணவர் கள் பயன்பெறும் வகையில் கடல் கல்வி அமைப்புடன் இணைந்து செயல்படுத்தப்படுவதாக பெருமிதத்துடன் கூறுகின்றார் டாக்டர்  எழிலன் நாகநாதன்.

20.4.2023 முதல் 14.5.2023 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் அமைந்துள்ள ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவல கத்தில் கல்வி உரிமைச் சட்டத் தின்கீழ் மாணவர் சேர்க்கை  முகாம் நடைபெறுகிறது. 

முகாமில் மாணவர்கள் சேர்க்கையின்போது மாணாக்கர் ஒளிப்படம், பிறப்புச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் (ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள்), இருப்பிடச் சான்று, பெற்றோர் அல்லது காப்பாளரின் ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களுடன் வருமாறு கூறப்பட்டுள்ளது. 

மேலும், எல்.கே.ஜி வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழநதைகள் 1.8.2019 முதல் 31.7.2020க்குள்ளும், முதலாம் வகுப்பில் சேர விணப் பிக்கும் குழந்தைகள் 1.7.2017 முதல் 31.7.2018க்குள்ளும் பிறந்திருக்க வேண்டும் என்று கூறப்பட் டுள்ளது. 

No comments:

Post a Comment