மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா வருகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 25, 2023

மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா வருகிறது

மதுரை, ஏப். 25-  மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.500 கோடி முதலீட்டில் மென் பொருள் நிறுவன கட்றீட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.

மதுரை நாகமலை புதுக் கோட்டை அருகிலுள்ள வடபழஞ்சியில் அரசு தகவல் தொழில் நுட்ப பூங்கா வளாகத் தில் அமெரிக் காவை சேர்ந்த டியோ மென்பொருள் தயாரிக்கும் நிறுவனம் ரூ.500 கோடி முதலீட்டில் அமைக் கிறது. 

இதுதொடர்பாக அந்த நிறுவ னம் தமிழ்நாடு அரசிடம் ஏற் கெனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான புதிய அலுவலக கட்டடம் எல்காட் அலுவலக வளாகத்தில் அமைக்கப் படுகிறது. கட்டடப் பணிகளை  நிதிய மைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (24.4.2023) தொடங்கி வைத்தார்.

5 ஆயிரம் பேருக்கு வேலை:

அப்போது அமைச்சர் கூறும் போது, ‘இங்கு அமையும் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா மூலம் சுமார் 5 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இதன்மூலம் இளைய தலைமுறையினரின் வாழ்க்கை மேம்பாடு அடையும். தமிழ்நாட்டில் தொழில் செய்ய வரும் தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசுஅனைத்து வித மான ஒத்துழைப்பையும் அளிக்கும்' என்று குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment