கருநாடகாவில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 23, 2023

கருநாடகாவில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உறுதி

சென்னை,ஏப்.23- தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கடந்த 21.4.2023 அன்று வந்திருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் கலந்து கொண்டார். 

அதன் பின்னர் செய்தியாளர் களைச் சந்தித்து பேசுகையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மானிய கோரிக்கை மீதான விவா தத்துக்கு பதில் அளித்து பேசுவதை கேட்பதற்காக சட்டமன்றத்திற்கு வந்தேன். கருநாடக மாநில சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். அதில் எவ்விதமான சந் தேகமும் இல்லை.

ராகுல் காந்தியை பொறுத்த வரை அவருடைய தாத்தா மற்றும் பாட்டனார் காலத்தில் இருந்து அவர்களின் குடும்பம் இந்த நாட்டிற்கு சேவை மற்றும் தியாகம் செய்துள்ளனர்.  தங்களது மாபெ ரும் ஆனந்த பவன் இல்லத்தை இந்த நாட்டிற்காக கொடுத்த வர்கள். அவர்களை எப்படியாவது அடக்கி விடலாம் என்று நினைத்து சட்டத்தின் பெயரால் எப்படி யா வது முடக்கி விடலாம் என்று நினைத் தால் அது கண்டிப்பாக நடக்காது.

தற்போது சட்டமன்றத்திற்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பேச்சை கேட்கும்போது மிகவும் நன்றாக இருந்தது. அவரது பேச்சு கலைஞர் பேசுவது போல்  இருந்தது. என்னைப் பொறுத்த வரை எனது பொது வாழ்வில் மூன்று பேருக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். நடிகர் திலகர் சிவாஜி கணேசன், சோனியா காந்திக்கு கடமைப்பட்டு இருக்கி றேன். அதேபோல் நம்முடைய முதலமைச்சர் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய மு.க.ஸ்டாலினுக்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்" என்று கூறினார்.

No comments:

Post a Comment