கருநாடக சட்டமன்றத் தேர்தல் - பி.ஜே.பி.க்காக அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனுக்கள் வாபஸ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 25, 2023

கருநாடக சட்டமன்றத் தேர்தல் - பி.ஜே.பி.க்காக அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனுக்கள் வாபஸ்

சென்னை, ஏப். 25- பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, கருநாடக மாநிலம் புலிகேசிநகர் தொகுதி அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவை திரும்பப் பெறுவதாக அக்கட்சியின் தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும், மேனாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை 24.4.2023 அன்று, பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் தொலை பேசி மூலம் தொடர்புகொண்டு, கர்நாடக மாநிலத்தில் 10.05.2023 அன்று நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், (159) புலிகேசிநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அ.தி.மு.க. வேட்பாளர் டி.அன்பரசனை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தலைமை பரிசீலனை செய்து, பாரதிய ஜனதா கட்சியின் கோரிக் கையை ஏற்று, கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான டி.அன்பரசன் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ் வாறு அதில்  தெரி விக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வரும் மே 10ஆம் தேதி நடக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கருநாடக அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து ஆலோசனை நடத்திய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பெங்களூருவில் உள்ள புலிகேசிநகர் தனி தொகுதியில் அதிமுக சார்பில் அவைத் தலைவர் அன்பரசன் வேட்பாளராக அறிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment