48 மருந்துகள் தரமற்றவை: மருந்து தர கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 25, 2023

48 மருந்துகள் தரமற்றவை: மருந்து தர கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு

சென்னை. ஏப். 25- நாட்டில் விற்கப்படும் மருந்து, மாத்திரைகளை, ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன.

போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சந்தையில் விற்பனையில் உள்ள, 1,497 மருந்துகள், கடந்த மாதம் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில், காய்ச்சல், கால்சியம், இரும்புச் சத்து, உயர் ரத்த அழுத்தம், செரிமான மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும், 48 மருந்துகள் தரமற்றவை என, கண்டறியப்பட்டது.

அந்த மருந்துகளின் விபரங்களை, ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின், https://cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment