கலாச்சேத்திரா பிரச்சினை: நாளை இடைக்கால ஆணை உயர் நீதிமன்றம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 25, 2023

கலாச்சேத்திரா பிரச்சினை: நாளை இடைக்கால ஆணை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை, ஏப். 25- கலாச்சேத்ரா கல்லூ ரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் அடிப் படையில் கலாச்சேத்ராவின் நடன ஆசிரியர் ஹரிபத்மனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப் பட்டுள்ள குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெறக் கூடாது எனவும், குழுவில் மாண விகளின் பிரதிநிதிகள், பெற்றோ ரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண் டும் என்றும் கோரி கல்லூரி மாண விகள் 7 பேர் சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், "புகார் அளித்த மாணவிகளுக்கு எதிராக எந்த நட வடிக்கையும் எடுக்க கூடாது என கலாஷேத்ராவுக்கு தடை விதிக்க வேண்டும். பாலியல் தொல்லை அளித்தவர்கள் வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும். மேலும் கலாச்சேத்ரா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய தமிழ்நாடு மகளிர் ஆணையம், தனது அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, "விசாரணைக் குழுவை உயர் நீதிமன்றம் ஏன் நியமிக்கக் கூடாது என விளக்க மளிக்கும் படி கலாச்சேத்ரா அறக் கட்டளைக்கு உத்தரவிட்டார். மேலும், மாணவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதித் தும், மாநில மகளிர் ஆணைய அறிக்கையை மூடி முத்திரை வைத்த கவரில் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கும்" உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி தண்ட பாணி முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, "கலாச்சேத்ரா தரப் பில் ஆஜரான கூடுதல் சொலிசிட் டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்த ரேசன், உண்மை கண்டறியும் குழு வாகவும், பாதிக்கப்பட்ட மாணவி கள் புகார் அளிக்கவும் ஏதுவாக ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் சட்ட விதிகளின் அடிப்படையில் பாலியல் தொல்லை புகார் குறித்து விசாரிக்க உள் விசாரணைக் குழு அமைக்கப் பட்டுள்ளது” என விளக்கமளித் தார். மேலும், ”பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டம், பல் கலைக்கழக மானியக் குழு சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் கலாச்சேத்ரா சார்பில் பாலியல் தொல்லைகள் தடுப்பது தொடர் பாக பாலின பாகுபாடற்ற கொள்கை விரைவில் வகுக்கப்படும்" எனவும் தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து சட்டத்தை வீழ்த்தும் வகையில் நீதிபதி கண் ணன் குழு அமைக் கப்பட்டுள்ள தாக சுட்டிக்காட்டிய மாணவிகள் தரப்பு மூத்த வழக்குரைஞர் ஆர். வைகை, உள் விசாரணைக் குழுவும், கண்ணன் குழுவும் செயல்படக் கூடாது. மேலும், உள் விசாரணை குழுவில் கலாச்சேத்ரா அறக்கட் டளை இயக்குநர் ரேவதி ராமச்சந் திரன் இடம் பெறக் கூடாது எனவும் வலியுறுத்தினார். அதன் பின், நீதிபதி கண்ணன், குழுவில் புகார் அளிக்க வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை. ஆகவே இக்குழுவில் அளிக்கும் புகார்கள், உள் விசாரணைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூடுதல் சொலிசிட்டர் ஜென ரல் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் இடைக்கால உத்தரவை நாளை (26.4.2022) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment