மம்தா-நிதிஷ்குமார் சந்திப்பு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 25, 2023

மம்தா-நிதிஷ்குமார் சந்திப்பு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசனை

கொல்கத்தா ஏப் 25-- "எனக்கு எந்த ஈகோவும் இல்லை; பாஜக பூஜ்யமாக வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்" என்று மம்தா கூறியிருக்கிறார். 

திரிணமூல் காங்கிரஸ் கட் சியின் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தாவை நேற்று  (24.4.2023) கொல்கத்தா வில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதல மைச்சர்ர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்தித்தனர். 

2024 தேர்தல் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய மம்தா, "பாஜகவை எதிர்க்கும் மெகா கூட்டணிக்கான கட்சிகள் ஒருங்கிணைப்பில் எனக்கு எவ்வித ஈகோவும் இல்லை.வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவுக்கு எதிரான தாக மட்டுமே இருக்கப் போகி றது. நான் ஏற்கெனவே சொல் லியதுபோல் ஒருமித்த கருத் துடைய கட்சிகள் தேர்தல் போருக்காக ஒன்றிணைவதில் எந்த எதிர்ப்பும் இல்லை. நிதிஷ் குமாரிடம் நான் ஒரே ஒரு கோரிக்கையை முன்வைத்துள் ளேன். ஜெயப்பிரகாஷ் நாராய ணன் இயக்கம் பீகாரில் இருந்து தான் ஆரம்பித்தது. அதனால் நாம் பீகாரில் ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கை களைப் பற்றி அங்கே முடிவு செய்ய வேண்டும். அதற்கும் முன்னதாக நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்ற செய்தியை வலிமையாகக் கடத்த வேண்டும். எனக்கு பாஜகவை ஜீரோவாக்க வேண் டும். அவர்கள் இப்போது ஊடக துணையோடு பெரிய ஹீரோவாக உலாவருகிறார்கள் என்று கூறினார்.

பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிதிஷ் குமார் முதலில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவை சந்தித்துள்ளார். பின்னர் அவர் லக்னோ சென்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தார். சமீப கால மாகவே காங்கிரஸ் கட்சியுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சி யும், சமாஜ்வாதி கட்சியும் இணக்கம் காட்டாத நிலையில் எல்லா கட்சிகளையும் ஒருங்கி ணைக்கும் முயற்சியில் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் அண்மையில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலை கூட நிதிஷ் குமார் சந்தித்தார். ஆம் ஆத்மி காங்கிரசின் மிகப்பெரிய விமர்சகராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிதிஷ் குமாருடைய இந்த முயற்சியை அய்க்கிய ஜனதா தளக் கட்சியினர் எதிர்க்கட்சி களை ஒருங்கிணைக்கும் ’நிதிஷ் ஃபார்முலா’ என்று கூறி வரு கின்றனர். நிதிஷின் முயற்சி குறித்து அய்க்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரான கே.சி.தியாகி கூறுகையில், ”நரேந்திர மோடிக்கு எதிராக வெற்றியைப் பெற வேண்டு மானால் 2024இல் ஒருவரை எதிர்த்து இன்னொருவர் என்ற நிலைமட்டுமே கைகொடுக்கும். அப்படியென்றால் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சார்பாக வேட்பாளர்கள் நிறுத் தப்பட வேண்டும்” என்றார். 

சமீப காலமாகவே காங்கி ரசை சரமாரியாக விமர்சித்து வந்த திரிணமூல் காங்கிரஸ் அண்மையில் ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி இழப்புக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க் கட்சிகள் முன்னெடுத்த போராட் டங்களில் களம் இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ”எனக்கு எந்த ஈகோவும் இல்லை; பாஜக பூஜ்யமாக வேண்டும்” என்று மம்தா கூறியிருப்பது மெகா கூட்டணிக்கு ஒரு நல்லதொரு சமிக்ஞை என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment