ஆளுநரை எதிர்த்து டில்லி சட்டப் பேரவையிலும் தீர்மானம் கெஜ்ரிவாலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு - நன்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 17, 2023

ஆளுநரை எதிர்த்து டில்லி சட்டப் பேரவையிலும் தீர்மானம் கெஜ்ரிவாலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு - நன்றி

சென்னை ஏப் 17  மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ண யிக்க வலியுறுத்தி டில்லி சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறை வேற்றப்படும் என்று தெரிவித் துள்ள டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு, தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித் துள்ளார். 

தமிழ்நாடு பேரவையில் நிறை வேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப் புதல் அளிக்க ஆளுநருக்கு காலநிர்ண யம் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர் மானத்தை இணைத்து, பாஜக அல் லாத மாநிலங்களைச் சேர்ந்த  முதல மைச்சர்களுக்கு தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழு தினார். அதில், இதேபோன்ற தீர்மா னத்தை அந்தந்த மாநில சட்டப் பேரவை களிலும் நிறைவேற்றும்படி மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத் திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 15.4.2023 அன்று டில்லி முதல மைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தில், ‘மாநில சட்டப் பேரவை களால் நிறைவேற்றப்படும் சட்ட முன்வடிவுகளை ஆளுநர்கள் ஒப் புதல் அளிப்பதற்காக காலக் கெடுவை நிர்ணயிக்கக் கோரி, ஒன்றிய அர சையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தும் தீர்மானத்தை நிறை வேற்றியதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவையை நான் பாராட்டுகிறேன்.

தீர்மானம் தாக்கல் செய்வேன்...

 அதே வழியில், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், தங்க ளின் அரசியல் சாசனப் பணிகளை மேற் கொள்ள காலக்கெடுவை நிர்ணயம் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, வரும் கூட்டத் தொடரில் டில்லி சட்டப் பேரவையில் நான் தீர்மானம் தாக்கல் செய்வேன்.மாநில, தேசிய தலைநகரப் பகுதி அரசுகளை சிறு மைப்படுத்த நினைக்கும் எந்தவொரு நடவடிக்கை யையும் நாம் கூட்டாக எதிர்க்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். 

'தீ' பரவட்டும்

இந்நிலையில், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று  (16.4.2023) வெளியிட்ட சமூக வலை தளப் பதிவில், ‘‘தமிழ்நாடு சட்டப் பேரவையின் தீர்மானத்தைப் பாராட்டி, எங்கள் முயற்சியில் இணைந்து கொண் டதற்கு டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு நன்றி. எந்த ஜனநாயகத் திலும் சட்டப் பேரவையின் இறை யாண்மை தான் உச்சமானது. நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநர்கள், மக் களால் தேர்நதெடுக்கப்பட்ட அரசு களின் சட்டமியற்றும் அதிகாரத்தை யும், பொறுப்புகளையும் சிறு மைப்படுத் தக்கூடாது. 'தீ ' பரவட்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment