பி.வி.ஆர். நூற்றாண்டு - சிகாகோ மருத்துவர் சோம. இளங்கோவன் 'பெரியார் உலக'த்துக்கு ரூ.1 லட்சம் நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 17, 2023

பி.வி.ஆர். நூற்றாண்டு - சிகாகோ மருத்துவர் சோம. இளங்கோவன் 'பெரியார் உலக'த்துக்கு ரூ.1 லட்சம் நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர்கள் பலர் பெருமைக் குரியவர்கள் . அவர்களில் சிலரை அவ்வப்போது நினைவு கொள்வோம் .

திருச்சிக்கருகே உள்ள பிச்சாண்டார்கோவில் பழம் பெருங் கிராமங்களில் ஒன்று. பக்தி தாண்டவமாடிய ஊர். அங்கே முதன் முதலாகப் பச்சை அட்டைக் குடிஅரசு இதழ் தலை  காட்டியது . 

அங்கு படித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத் தில் பணிபுரிந்த எனது சித்தப்பா தியாகராசன்தான் அறிமுகப்படுத்தியவர். 

குடும்பம் செல்வாக்கான குடும்பம்.  ஆகவே எதிர்ப்புகள் அதிகம் இல்லை ! 

சிறுவர்கள் படிப்பு, விளையாட்டு என்று பொதுத் தொண் டில் ஈடுபட்டிருப்பவர் . ஆகவே இளைஞர்களிடம் அன்பும் , மதிப்பும் பெற்றவர் . அவரது இளவல் தான் பி.வி.ஆர்.என்று பின் நாட்களில் அறியப்பட்ட இராமச்சந்திரன் ஆவார் . உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்து இரயில்வேயில் பணி புரிந்தார். குடிஅரசு, பாரதிதாசன் கவிதைகள், பின்னர் பெரியார், அறிஞர் அண்ணா நூல்கள் , விடுதலை நிறைந் திருக்கும் .அன்னார் தியாகராசன் காலராவில் இறந்து விட இராமச்சந்திரன் அவர் பாதையில் தொடர்ந்தார் . இரயில்வேயில் பணிபுரிந்த பெரியார் பெருந்தொண்டர்கள் சி.ஆளவந்தார், சச்சிதானந்தம், தர்மராஜன், இராதாகிருட் டிணன்,திருவாரூர் தாசு போன்றோர் குழுவாகப் பணி  புரிந்தனர் .  

பெரியார் மாளிகை தான் அலுவல் முடிந்ததும் செல் லுமிடம் .தந்தை பெரியாரின் அன்புக்குப் பாத்திரமானவர்கள் .பல இளைஞர்களை ஊக்குவித்து இயக் கத்தில் இணைத்த வர்கள் .பிச்சாண்டர் கோவில் பெரியார் கோட்டையாக உருவாகி சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் இரு பதுக்கும் மேற்பட்டோர் சிறை சென்றனர் .இரயில்வே பணியாளர் களின் பெரியார் இயக்கமாக  SRMU  உருவானது .அவர் களுடைய கடமைகளைத் திறம்படச் செய்ததால் சிறீரங்கம் அய்யங்கார் ரெயில்வேஎஸ்.அய்.ஆர். (South Indian Railways) அவர்களை ஒன்றும் செய்ய முடிய வில்லை! 

பி வி ஆர் மற்றவர்களைப் போல் ஊர்கள் மாறாமல் திருச்சி ஜங்சன் , பொன்மலையிலேயே வேலை நாட்கள் முழுதும் பணி புரிந்தார் . பொன்மலையில் தந்தை பெரியார் பல முறை பேசியுள்ளார்கள் .நானும் சென்று கேட்டுள்ளேன் . செல்லாத மாநாடுகளே இல்லை என்று தான் நினைக்கின்றேன் . நான் தஞ்சை சட்ட எரிப்பு மாநாடு முதல் அவர்களுடன் பல மாநாடுகள் சென்றிருக்கின்றேன்  அங்கு அவர்களது நண்பர்களைப் பார்த்து வியந்திருக்கின்றேன் . பலர் முரட்டுப் பெரியார் பெருந்தொண் டர்கள், கொள்கையில் தான் , வாழ்க்கையில் அல்ல! 

அவர்களுடன் பழகியதே என்னைப்  பக்குவப்படுத் தியது. அய்யா ஆளவந்தார் மிகவும் பண்பானவர் . ஆங்கில அறிவு மிக்கவர் .அந்தக் காலத்துப் பி ஏ .. அவர் ஈரோட்டில் பணி புரிந்த போது அறிஞர் அண்ணாவுடன் நன்கு பழகியவர். அவர் தலைமையில் எங்கள் வாழ்விணைவு நடந்தது மகிழ்ச்சி . அடக்குமுறை காலத்தில் அன்னை மணியம்மையாருக்குப் பெருந்துணையாக இருந்தவர் அய்யா ஆளவந்தார். அவரும், பி வி ஆர் அவர்களும் கடைசிவரை நெருங்கிய நண்பர்களாவே , கொள்கை வீரர்களாகவே இருந்தனர்.

பெரியார் பெருந்தொண்டர்கள் ஆற்றிய பணி மிகவும் போற்றத்தக்கது . ஆசிரியர் அவர்களிடம் மிக்க அன்புடனும் தலைமையிடம் மிக்க மரியாதை காட்டியும் எடுத்துக்காட்டாக இருந்தவர்கள். 

பி.வி.ஆர்.அவருடைய நூற்றாண்டைப் போற்றும்படி குடும்பத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பெரியார் உலகதிற்குத் தந்து மகிழ்கின்றோம்.

மருத்துவர் சோம. இளங்கோவன். 

சிகாகோ, பெரியார் பன்னாட்டு மய்யம், அமெரிக்கா


No comments:

Post a Comment