மேனாள் நீதிமன்ற தலைமை அதிகாரி டி.வி. வெங்கட்டரத்தினம் அவர்களுக்கு நமது வீர வணக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 12, 2023

மேனாள் நீதிமன்ற தலைமை அதிகாரி டி.வி. வெங்கட்டரத்தினம் அவர்களுக்கு நமது வீர வணக்கம்

திருச்சி மாவட்ட நீதி மன்றத்தின் தலைமை அதிகாரியாக பல ஆண்டுகள் பணியில் இருந்தவரும், அப்பழுக்கற்ற   முறையில் நேர்மையாகப் பணியாற்றியவரும், தந்தை பெரியார், அன்னை மணி யம்மையார், நமக்கும் உற்ற சட்ட ஆலோசகர் போல் தொண்டாற்றியவருமான மாமனிதர், நண்பர் டி.வி. வெங்கட்டரத்தினம்  (வயது 94) அவர்கள் இன்று (12.4.2023) காலை 9 மணி யளவில்  மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனையும், துன்பமும், துயரமும் அடைகிறோம்.

தனது குடும்பத்தினர் நலன் காக்கவும், பொது நலத்துடன் எவருக்கும் உதவிடும் வகையிலும் தொண்டாற்றிய மாமனிதர்.

திருச்சி செல்லும் போதெல்லாம் அவரில்லம் சென்று உரையாடி விட்டுத் திரும்புவோம் நாங்கள்  - குடும்பத்தோடு!

சீரிய பண்பாளர்; 'விடுதலை' தொடர் வாசகர்.

அவரை இழந்து வருந்தும் அவரது சகோதரிகள், உறவினர், குடும்பத்தினருக்கு நமது ஆறுதலையும்,   இரங்கலையும் தெரி வித்துக் கொள்கிறோம்!

திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் தோழர் 

 ஆரோக்கியராஜ் தலைமையில் மறைந்தவருக்கு  கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்துவர்.

நமது வீர வணக்கம்!


                                                                                                                                     கி.வீரமணி

                                                                                                                                   தலைவர், 

12.4.2023                                                                                                 திராவிடர் கழகம் 


No comments:

Post a Comment