அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமனம் நாமக்கல், சிறீபெரும்புதூரில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 20, 2023

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமனம் நாமக்கல், சிறீபெரும்புதூரில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள்

சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

சென்னை, ஏப். 20- அனைத்து ஜாதியி னருக்கும் அர்ச்சகர் பணி நியமனம் திட்டத்தின் கீழ் நாமக்கல் சிறீபெரும் புதூரில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி கள் தொடங்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது என சட்டப் பேர வையில் நேற்று (19.4.2023) அமைச் சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (19.4.2023) இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறைக்கான மானியக் கோரிக்கை மீது நடை பெற்ற விவாதத்திற்கு பதிலளித்து பேசிய இத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள் அறிவித்த தாவது:

கோயில்களில் சமூக நீதியை நிலைநாட்ட மற்றும் சேவையில் அனைவருக்கும சம வாய்ப்பினை உறுதி செய்ய 2006ஆம் ஆண்டில் திமுக அரசால் தீர்மானிக்கப்பட் டது.

கோயில்களில் பூஜை செய்யும் வாய்ப்பு ஜாதி பாகுபாட்டின் அடிப்படையில் மறுக்கப்படக் கூடாது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர் கள் கடந்த 14.8.2021ஆம் தேதி 56 பேர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அவர்க ளில் 24 பயனாளிகள் 6 கோயில் களால் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயின்றவர் கள் ஆவார்கள்.

மேற்சொல்லப்பட்ட 6 பயிற்சிப் பள்ளிகளின் விவரம் வருமாறு:

மதுரை மீனாட்சி சுந்தரேஸ் வரர் கோயில், பழநி தண்டாயுத பாணி சாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில், திரு வண்ணாமலை அருணாசலேசுவ ரர் கோயில், சிறீரங்கம் அரங்கநாத சாமி கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ஆகிய வற்றில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் உள்ளன.

மேலும் அர்ச்சகர் பயிற்சிப் பள் ளியை ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டம் லட்சுமி நரசிம்மன் கோயில், சிறீபெரும் புதூரிலுள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயில் மற்றும் பாஷ்யகார சாமி கோயிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment